8777 மரணமும் மன்னனின் குதிரை வீரனும்.

வோலோ ஸொயின்கா (ஆபிரிக்க மூலம்), எஸ்.பொன்னுத்துரை (தமிழாக்கம்). சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 ஜக்கரியா காலனி, 1வது தெரு, சூளைமேடு, 1வது பதிப்பு, செப்டெம்பர்  2012. (சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 ஜக்கரியா காலனி, 1வது தெரு, சூளைமேடு).

144 பக்கம், விலை: இந்திய ரூபா 180., அளவு: 21.5×13.5 சமீ., ISBN: 978-93-81322-07-9.

தடம் பதித்த ஆபிரிக்க இலக்கியங்கள் என்ற தொடரில் வெளிவரும் நைஜீரிய மொழிபெயர்ப்பு  நாடகம். இது முதன்முதலாக இலக்கியத்துக்கான நோபல் பரிசினை வென்ற ஆபிரிக்கரான  Wole Soyinka  எழுதிய Death and the King’s Horseman என்ற நாடக எழுத்துருவின்; தமிழாக்கமாகும். 1945ல் நைஜீரியாவில் நடந்த உண்மை நிகழ்வின் பாதிப்பில் உருவாகிய நாடகம். நைஜீரியாவின் பழைய யொருபா நகரமான ஓயொவின் அலாஃபின் மன்னன் ஒபாசியன் போலா 33 ஆண்டுகள் ஆட்சிசெய்தபின்  இறக்கிறான். அவனுடைய குதிரைவீரன் ஓலொரி எலெசின் விசேஷ வசதிகளுடன் வாழ்ந்தவன். ஓயோவின் மக்கள் அவன் தற்கொலைச் சடங்கைச் செய்து முடித்து, தன் எஜமானின் வழியில் பின்தொடர்வான் என்று எதிர்பார்க்கின்றனர்.  சுமார் மூன்றுவார காலம் கழித்து, அவன் ஓயோவுக்குத் திரும்பிவந்து, பாரம்பரியத் தற்கொலைச் செயலுக்கு முன்பாக  வெள்ளை ஆடை புனையும் சடங்கிலே நடனமாடிக்கொண்டே போகிறான்.  ஓயோவின் ஆட்சிப் பொறுப்பிலே இருந்த பிரித்தானிய  மாவட்ட கொலொனியல் அதிகாரி, அந்தக் குதிரைவீரனின் தற்கொலையைத் தடுக்கவேண்டும் என்று கட்டளையிடுகிறான். தன் தந்தை கைதுசெய்யப்பட்ட செய்தியை அறிந்த குதிரைவீரனின் கடைசி மகன் துரானா, தந்தைக்குப் பதிலாகத் தன் உயிரை மாய்த்து, சடங்கின் தேவையைப் பூர்த்திசெய்கிறான். இந்நாடகத்தை விளங்கிக்கொள்ள, பெரிய தலைவன் அல்லது பெரிய போர்வீரன் என்பவன் மிகவும் சக்திவாய்ந்த மூதாதையராக இருப்பார் என்பதை அறிதல் முக்கியமானது. மதிப்பையும் மரியாதையையும் இழக்கும் ஒருவர் வெறுக்கப்பட்டு எதற்கும் தகுதியற்ற மூதாதையர் ஆகிவிடுவார் என்பதும் பெறப்படும். எகுன்குன் சடங்குகளின்போது  மூதாதையரை மறுபடியும் உயிரூட்டித் திரும்பக் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கை யொருபாக்கள் மத்தியில் உண்டு. 1995 செப்டெம்பர் 17ம் திகதி இந்நாடகம்  பீ.பீ.சீ ரேடியோவில் ஒலிபரப்பப்பட்டவேளை அதனை நெறியாழ்கை செய்த அல்பி ஜேம்ஸ் கண்ட வோலோ ஸொயின்காவுடனான நேர்காணலும் பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

9695 நாவேந்தன் கதைகள்.

நாவேந்தன் (மூலம்), அசலகேசரி (பதிப்பாசிரியர்).  சென்னை 600109: யுனிக் மீடியா இன்டகிரேட்டர்ஸ், இல.8, ஆறாவது சந்து, 8ஆவது பிரதான சாலை, வைஷ்ணவி நகர், திருமுல்லைவாயில், 1வது பதிப்பு, மார்ச் 2014. (சென்னை 77: மணி