8792 வண்ணத்துப் பூச்சி எரிகிறது.

ஜொன்னி வீரா (சிம்பாவே  மூலம்), எஸ்.பொன்னுத்துரை (தமிழாக்கம்). சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 ஜக்கரியா காலனி, 1வது தெரு, சூளைமேடு, 1வது பதிப்பு, ஜுன்  2011. (சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 ஜக்கரியா காலனி, 1வது தெரு, சூளைமேடு).

200 பக்கம், விலை: இந்திய ரூபா 125., அளவு: 21.5×13.5 சமீ., ISBN: 978-93-81322-00-0.

தடம் பதித்த ஆபிரிக்க இலக்கியங்கள் என்ற தொடரில் வெளிவரும் சிம்பாவே மொழிபெயர்ப்பு  நாவல் இது. சிம்பாவே படைப்பாளியான ஜொன்னி வீரா Yvonne Vera எழுதிய Butterfly Burning என்ற நாவலின் தமிழாக்கமாகும். ரொடீசியா என்ற பெயரில் சிம்பாவேயில் வெள்ளையரின் கொடூர இன ஒதுக்கல் ஆட்சி நடைபெற்ற நாற்பதுகளைப் பின்னணியாகக் கொண்டு வண்ணத்துப்பூச்சி எரிகிறது நாவல் எழுதப்பட்டுள்ளது. பேபேலாபி என்ற அழகிய இளம்பெண், ஓர் அறை கொண்ட வீட்டிலே நடத்தும் காதல் வாழ்க்கையில் மட்டும் திருப்தியடையாது, புதிய தலைமுறையைச் சேர்ந்த கறுப்பினப் பெண்களின ;சார்பாக எதையோ சாதிக்க விரும்புகிறாள். அக்காலத்து நகர வாழ்க்கையின் சோகமும் கலக்கமும் விரவ, நாயகியின் பலத்தையும் துணிச்சலையும், ஈற்றிலே இயலாமையையும் இந்நாவல் சித்திரிக்கின்றது. துணுக்குகளாக வரும் சம்பவக் கோவைகள் ஈற்றில் நாவலாகப் பின்னப்படும் பாங்கு வாசகனை நிமிரவைக்கின்றது.

ஏனைய பதிவுகள்

marca de apuestas de casino

Casino 20 euros gratis sin deposito Juegos de casino Marca de apuestas de casino Monopoly live werkt als een radspel waar je op verschillende uitkomsten