8810 சேதுக் கால்வாய்த் திட்டம்: அரசியல் பொருளாதார இராணுவ சூழலியல் நோக்கு.

கே.ரி.கணேசலிங்கம், தி.திருக்குமரன். யாழ்ப்பாணம்: பிரம்மா வெளியீடு, 1வது பதிப்பு, மே 2006. (யாழ்ப்பாணம்: சிமாட் பிறின்டேர்ஸ், 717, காங்கேசன்துறை வீதி).

v, 93 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×14 சமீ.

சேது சமுத்திரத் திட்டம் இந்திய பொருளாதார இராணுவ அரசியல்ரீதியில் இன்றியமையாததாக அமைகின்றது. அதற்குரிய காரணங்களை இந்நூல் ஆராய்ந்து சொல்கின்றது.  அதே வேளையில் இத்திட்டத்தினால் ஏற்படும் சூழலியல் பாதிப்புகளையும் நோக்கி உள்ளது. தன்னைச் சூழ இயற்கையாகவே பாதுகாப்பு அரணைக் கொண்ட பாரத மாதாவின் பாதங்களை கொடிய வாள் கொண்டு வெட்டுமாற்போல் உள்ளது சேதுகால்வாய் வெட்டு என்று கூறும் இவ்வாய்வு, இத்திட்டம் முழுமையடையும் வேளையில் யாழ். தீபகற்பத்தில் கடலரிப்பின் வீதம் அதிகரித்தல், நிலக்கீழ் நீர் உவராதல், நிலநடுக்கம் என்பன ஏற்படலாம் என்பதையும் எதிர்வுகூறுகின்றது. கடல் சூழல் மாத்திரமன்றி யாழ்க்குடாவின் தரைச்சூழலும் இதனால் பாதிக்கப்படலாம் என்பதையும் இவ்வாய்வு எச்சரிக்கின்றது.

ஏனைய பதிவுகள்