பத்மா சோமகாந்தன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xii, 113 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 400., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-331-0.
கலை, இலக்கிய கல்வித்துறைகளில் தடம் பதித்த பதினைந்து பெண்கள் பற்றிய இத் தொகுப்பில், சுன்னாகம் செல்லாச்சி அம்மையார் (1863-1929), மங்களம்மாள் மாசிலாமணி (1864-), கலாநிதி முத்தம்மா தில்லையம்பலம் (1885-1976), மீனாட்சியம்மாள் நடேசையர், செல்லம்மா நாகேந்திரர் (1900-1989), பண்டிதை பத்மாசனி அம்மாள் (1903-1978), இராசம்மா கனகசபை (1904-1992), கண்மணி ஸ்ரீஸ்கந்தராஜா (1909-), இரத்தினா நவரத்தினம் (1910-1993), சௌந்தரம் சந்தனநங்கை கந்தப்பு (1912-1978), பண்டிதை கங்கேஸ்வரி கந்தையா (1917-1993), பண்டிதை சத்தியதேவி துரைசிங்கம் (1922-1986), தங்கம்மா அப்பாக்குட்டி (1925-1987), பத்மா இராமநாதன் (1926-1987), டாக்டர் மேரி ரட்ணம் (1873-1962) ஆகியவர்களின் வாழ்வும் பணிகளும் தனித்தனிக் கட்டுரை உருவில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அறியப்படாத நிலையிலும், அறிந்தும்-ஆவண வெளிக்குக் கொண்டுவரப்படாத நிலையிலுமுள்ள ஆளுமைகள் இந்நூலிற் பதிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆன்மீகம், சமூகம், கல்வி, சமூக சேவை முதலாம் துறைகளில் ஊறியெழுந்த ஆளுமைகளின் எழுத்துக்கு வராத பரிமாணங்கள் இந்நூல்வழியாக எழுகோலம் பெறுகின்றன. நூலை வாசிக்கும் பொழுது பல கருத்துக்களும் வினாக்களும் துளாவி எழுதலைக் குறிப்பிடவேண்டியுள்ளது. அவ்வாறான அருட்டல்களைத் தூண்டும் எழுத்தையும் தொகுப்பையும் மேற்கொண்ட நூலாசிரியரின் முயற்சி பெண்ணிய நோக்கில் வினையூட்டும் பதிவுக்குரியது. பத்மா சோமகாந்தன், முற்போக்குக் கருத்தியலின் பிறிதொரு நீட்சியாக அமையும் பெண்ணியத்தைப் புனைவு வெளிக்குக் கொண்டுவருபவர்களுள் தனித்துவமானவர்.