8843 மஹிந்த: மஹிந்த ராஜபக்ஷவின் வாழ்க்கை வரலாறு. 

எஸ்.தில்லைநாதன். நுகேகொட: சரசவி வெளியீட்டாளர்கள், 1/3, ஸ்டான்லி திலகரத்ன மாவத்தை, 1வது பதிப்பு, ஜனவரி 2011. (நுகேகொட:  சரசவி பதிப்பகம்).

216 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-671-260-5.

இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் (பேர்சி மகேந்திரா மஹிந்த ராஜபக்ஷ, பிறப்பு: 18-11-1945) வாழ்க்கை வரலாற்றை, அவரது வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை உள்ளடக்கியதாக  இந்நூலை எழுதியிருப்பவர் மூத்த ஊடகவியலாளரும் தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான கலாபூஷணம் எஸ்.தில்லைநாதன். முப்பது ஆண்டுக்கால யுத்தத்தினால் சின்னாபின்னமாகியிருந்த தாய்நாட்டில் மீண்டும் சமாதானத்தையும் இன ஐக்கியத்தையும் இன ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்தியமைக்காக ஜனாதிபதிக்கு இந்நூலை சமர்ப்பிப்பதாக நூலாசிரியர் தன் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.  இலங்கையின் ஆறாவது ஜனாதிபதியாகப் பதவிவகிக்கும் மஹிந்த ஹம்பாந்தொட்டையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஸ்ரீலங்கா சுநதந்திரக் கட்சியின் அங்கத்தவராக அரசியலில் ஈடுபட்டவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  216668).

ஏனைய பதிவுகள்

Poker Sem Entreposto

Content Estratégia Para Jogar Poker Acessível Que Jogar Poker Online Com Amigos Afinar Brasil ¿exiten Límites De Egresso Infantilidade Ganancias Con Un Bono Sin Casa?

9278 இலங்கைப் பாராளுமன்ற அரசியலும் பன்னிரெண்டாவது  பொதுத் தேர்தலும்.

எஸ்.அரசரெத்தினம். கல்முனை 2: எஸ்.அரசரெத்தினம், ராஜ்பதி, வ.வீ.வீதி, 1வது பதிப்பு, சித்திரை 2002. (கல்முனை: கோல்டன் ஓப்செட் அச்சகம்). 104 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 18×14 சமீ. இந்நூல் இலங்கைப் பாராளுமன்ற