9278 இலங்கைப் பாராளுமன்ற அரசியலும் பன்னிரெண்டாவது  பொதுத் தேர்தலும்.

எஸ்.அரசரெத்தினம். கல்முனை 2: எஸ்.அரசரெத்தினம், ராஜ்பதி, வ.வீ.வீதி, 1வது பதிப்பு, சித்திரை 2002. (கல்முனை: கோல்டன் ஓப்செட் அச்சகம்).

104 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 18×14 சமீ.

இந்நூல் இலங்கைப் பாராளுமன்ற அரசியல் வரலாறு என்ற முதலாவது  இயலுடன் தொடங்கி, பதினொராவது பாராளுமன்றக் கலைப்பு, பன்னிரெண்டாவது  பொதுத் தேர்தலும் பங்குபற்றிய கட்சிகளும், மாவட்டங்களும் வேட்பு மனுக்களும், தேர்தல் விஞ்ஞாபனங்களும் பிரச்சாரங்களும், தேர்தல் வன்முறைகளும் பின்னணிகளும், தேர்தல் முடிவுகளும் காரணங்களும், புதிய அரசும் பொறுப்புகளும் ஆகிய தலைப்புக்களில் மொத்தம் எட்டு அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது. பதினொராவது பாராளுமன்றம் தனது ஆயுட்காலத்திற்கு  முன்னதாகவே  கலைக்கப்பட்டதன் காரணங்களை விரிவாக இரண்டாவது இயலில் ஆசிரியர் ஆராய்கின்றார்.  மூன்றிலிருந்து  ஐந்தாவது  வரையிலான  அத்தியாயங்களில் தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள் பற்றியும் தேர்தல் வரை அவற்றின் பல்வேறு நடவடிக்கைகள் பற்றியும் ஆராய்கின்றார். பொதுத்தேர்தலின் பொழுது இடம்பெற்ற வன்முறைகள் பற்றி ஆறாவது இயலில் பட்டியலிடும் ஆசிரியர் பின்னைய இறுதி இரு இயல்களில் பொதத்தேர்தல் முடிவுகள் பற்றியும், புதிய அரசுக்குள்ள பொறுப்புக்கள் பற்றியும் எடுத்துக் கூறுகின்றார். வளமான வாழ்வைத்தேடி (சமூகவியல்), விழிகளால் கதைகள் பேசி (இலக்கியம்)ஆகிய நூல்களை முன்னர் எழுதியுள்ள ஆசிரியரின் மூன்றாவது நூல் இது. தீவிர வாசிப்புத் தேடல் கொண்ட நூலாசிரியர் அரச வங்கியொன்றின் அதிகாரியாகப் பணியாற்றுகிறார்.  (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 29019).

ஏனைய பதிவுகள்

ll Tragamonedas Buffalo King

Tomando nuestro prototipo ayer, lo mismo pasa con los casinos con el pasar del tiempo giros de balde acerca de tragamonedas. Recibirás una una nâº