8851 வாழும் நினைவுகள்-01.

மட்டக்களப்பு-பண்டாரியாவெளி அமரர் ஞானமுத்து அலையப்போடி நினைவு வெளியீடு.  நினைவு மலர்க்குழு. மட்டக்களப்பு: மட்டக்களப்பு-பண்டாரியாவெளி அமரர் ஞானமுத்து அலையப்போடி நினைவு வெளியீடு, 1வது பதிப்பு, 2011. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(2), 15 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17×11 சமீ.

படுவான்கரைப் பிரதேசத்தின் சமூகப்பெரியார் அமரர் ஞானமுத்து அலையப்போடி அவர்களின் முதலாமாண்டு நினைவினைத்தாங்கி வெளிவரும் சிறுநூல். இதில் வரலாற்று நாயகன் என்ற தலைப்பில் கவிக்கோ வெல்லவூர்க் கோபால் (கலாபூஷணம் எஸ்.கோபாலசிங்கம்) எழுதிய அமரர் ஞானமுத்து அலையப்போடி பற்றிய கட்டுரையும், நமது உள்ளத்தின் உயிர்ப்பு என்ற தலைப்பில் கவிமணி திமிலைத்துமிலன் (இலக்கிய கலாநிதி எஸ்.கிருஷ்ணபிள்ளை) எழுதிய கவிதையும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்