8853 தூக்குக் கயிற்றில் பகத்சிங்.

புத்தொளி சிவபாதம். அச்சுவேலி: தமயந்தி பதிப்பகம், 1வது பதிப்பு, ஆடி 1978. (அச்சுவேலி: சிவகுமாரன் அச்சகம்).

18 பக்கம், விலை: ரூபா 1.50, அளவு: 18×12.5 சமீ.

செப்டெம்பர் 27 1907இல் பஞ்சாப்பின் லயால்பூர் மாவட்டத்தில்  பங்கா என்ற கிராமத்தில் பிறந்தவர் பகத்சிங். இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு அமைப்பின் தலைவர்களுள் ஒருவரான இவர் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக  இந்தியாவில் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்தவர். 1931 மார்ச் 23இல் கொலைக்குற்றஞ்சாட்டப்பட்டு ஆங்கிலேயர்களால் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு மரணித்தவர். இவரது வீரம்செறிந்த வாழ்க்கை வரலாறு இந்நூலில் சொல்லப்பட்டுள்ளது.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  98987).

ஏனைய பதிவுகள்