8870 தமிழ் மொழி அகராதி தந்த சதாவதானி.

மனோன்மணி சண்முகதாஸ். பருத்தித்துறை: நுழையன் தோட்ட வெளியீடு, மலர் 1, மேலைப்புலோலி, 1வது பதிப்பு, ஏப்ரல் 1995. (யாழ்ப்பாணம்: தாசன் அச்சகம், மகேந்திரா வீதி).

(6), 36 பக்கம், விலை: ரூபா 30., அளவு: 18.5×13 சமீ.

பரத சேனாபதியம், இசை நுணுக்கம், சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, அன்பினைந்திணை, கல்லாடம்,  தொல்காப்பியம், அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, பத்துப்பாட்டு, வீரசோழியம், இதிகாசங்கள், புராணங்கள், சூளாமணி, சித்தாந்த சாத்திரம், பிங்கலந்தை, திவாகரம் ஆகிய நூல்களிலிருந்து எடுத்த சொற்களையும் அவற்றுக்கான விளக்கங்களையும் பிரதானமாகக் கொண்ட தமிழ்ப்பேரகராதியை 1899இல் எமக்கு வழங்கியவர் மேலைப் புலோலியூர் சதாவதானி நா.கதிரைவேற்பிள்ளை அவர்கள்.  அப்பெரியாரின் நினைவுநாளை முன்னிட்டு 16.4.1995இல் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. சதாவதானி கதிரவேற்பிள்ளை பற்றிய பிற்காலத் தமிழறிஞர்களின் நூல்களில் அவர் பற்றிக்கூறப்பட்டவற்றை தொகுத்து இந்நூலின் வழியாக ஒரு வரலாற்றுப் பதிவினை  நூலாசிரியர் மேற்கொண்டிருக்கிறார். தன் வாழ்நாளில் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் எதிர்ப்புக்கும் உள்ளான இலக்கியத் தீவிரவாதியான சதாவதானியின் முழுமையான வரலாறொன்றினை எழுத வேண்டிய தேவையையும் இந்நூல் வலியுறுத்துகின்றது.

ஏனைய பதிவுகள்

online casino with real money

オンラインカジノのレビュー Casino slots online Online casino with real money VegasSlotsOnline.com is the web’s definitive slots destination, connecting you and like-minded players to the games you