மனோன்மணி சண்முகதாஸ். கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, 1/2, டாம் வீதி, 1வது பதிப்பு, 2007. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, 1/2, டாம் வீதி).
53 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 150., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-088-9.
யாழ்ப்பாணத்தில் சிறுப்பிட்டிக் கிராமத்தைச் சேர்ந்த சைவக்குடும்பமாகிய குருநாதரின் புதல்வரான வைரவநாதபிள்ளையவர்கள் வட்டுக்கோட்டைச் செமினரியிலே கல்விபயின்றபோது கிறிஸ்தவராக மதம்மாறியவர். 12.09.1832இல் பிறந்த அவரது மூத்த மகனே சார்ள்ஸ் வின்ஸ்லோ தாமோதரம் (சி.வை.தாமோதரம்பிள்ளை). சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் வாழ்வும் பணியும் இந்நூலில் வாழ்க்கைப் பின்னணி, இருமொழிப் புலமை, தமிழ்நாட்டில் சி.வை.தா., பதிப்புத் தொண்டு, சொந்த வாழ்வு, இலக்கிய உணர்வு, மூலப்பாடத் திறனாய்வு, தமிழ்மொழி வளர்ச்சிக்கு சி.வை.தாவின் பங்கு, இறுதிக்காலம் ஆகிய எட்டு இயல்களில் இரத்தினச்சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது. பின்னிணைப்புகளாக சி.வை.தா பதிப்பித்த நூல்கள், சி.வை.தா இயற்றிய நூல்கள், நூல் விற்பனை தொடர்பான சி.வை.தாவின் விளம்பரம் என்பனவும் தரப்பட்டுள்ளன. நூலின் இறுதியில் சி.வை.தாமோதரம்பிள்ளை பற்றிய மேலதிக வாசிப்புக்கான பல் கட்டுரைகளும் நூல்களும் கொண்ட பட்டியலொன்றும் இணைக்கப்பட்டுள்ளது.