க.சண்முகலிங்கம் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
viii, 208 பக்கம், விலை: ரூபா 750., அளவு: 24.5×17.5 சமீ., ISBN: 978-955-659-414-0.
ஈழத்துப் படைப்பாளி செ.கணேசலிங்கனின் பவளவிழாவை முன்னிட்டு தொகுக்கப்பட்ட கட்டுரைகளின் படையலாக இந்நூல் அமைகின்றது. இந்நூலில் ஆக்கங்கள் நான்கு பகுதிகளாக வகுக்கப்பட்டுள்ளன. முதலாவது பகுதி செ.க வின் வாழ்க்கைப் பின்னணியையும் இலக்கியப் பங்களிப்பையும் சுருக்கமாக அறிமுகம் செய்கின்றது. இரண்டாவது பகுதியில் செ.க வின் படைப்புகள் பற்றிய மதிப்பீடுகள் உள்ளன. மூன்றாவது பகுதியில் அடங்கும் கட்டுரைகள் தமிழின் முன்னணிப் படைப்பாளிகள் பலரது செ.க. பற்றிய நினைவுக் குறிப்பகளாக அமைகின்றன. நான்காவது பகுதி செ.க.பற்றி அவரோடு நெருக்கமாகவிருந்த நண்பர்கள் சிலரின் குறிப்புகளைக் கொண்ட கட்டுரைகளின் தொகுப்பாக அமைகின்றது. ஐந்தாவது பகுதியில் செ.க.வின் நேர்காணல்களும் நூலகவியலாளர் என்.செல்வராஜாவினால் தயாரிக்கப்பட்ட அவரது படைப்புகள் பற்றிய முழுமையான நூற்பட்டியலும் அட்டைப் படங்களுடன் உள்ளடக்கப்பட்டுள்ளன. முதலாம் பகுதியில் உள்ள கட்டுரைகள் புலமையாளர்களால் எழுதப்பட்டவை. இவை செ.க.வின் படைப்பாளுமையை மதிப்பீடு செய்வதுடன் நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் அவரின் பங்கும், வகிபாகமும் பற்றி ஆராய்வனவாகவும் உள்ளன. நூலின் எஞ்சிய பகுதிகளில் உள்ள கட்டுரைகள் செ.கணேசலிங்கனின் ஆளுமையின் அறியப்படாத பகுதி பற்றிய செய்திகளைத் தருகின்றன.