8897 அகாலம்: ஈழப் போராட்ட நினைவுக் குறிப்புகள்.

புஷ்பராணி.  சென்னை 600005: கருப்புப் பிரதிகள், B55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, 1வது பதிப்பு, மே 2012. (சென்னை 600005: ஜோதி என்டர்பிறைசஸ்).

208 பக்கம், விலை: இந்திய ரூபா 155., அளவு: 21×14 சமீ.

யாழ்ப்பாணத்தின் மயிலிட்டிக் கிராமத்தில் 1950இல் பிறந்த பஷ்பராணி, ஈழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்ககால அமைப்புகளான தமிழ் இளைஞர் பேரவையிலும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திலும் (TLO- பின்னாளில் TELOthf மாற்றம்பெற்றது) இயங்கியவர். தமிழ் இளைஞர் பேரவையின்  மகளிர் பிரிவு அமைப்பாளராக இருந்தவர். ஆயுதம் தாங்கிய ஈழப்போராட்ட வரலாற்றில் முதலாவதாகச் சிறைக்குச் சென்ற இரு பெண் போராளிகளுள் இவரும் ஒருவர். அவரது தடுப்பக்காவல் சித்திரவதைகளும், சிறை அனுபவங்களும் வலி மிகுந்தவை. 1986இல் இலங்கையிலிருந்து வெளியேறிய புஷ்பராணி தற்போது பிரான்சில் வாழ்ந்து வருகின்றார். தனது அரசியல் வாழ்க்கை அனுபவங்களை இந்நூலில் புஷ்பராணி  விரிவாகப் பதிவுசெய்திருக்கிறார். பேரிழப்புகளைப் பெரும் விலையாகத் தந்தவிட்டுச் சென்றுள்ள ஈழப் போராட்டத்தின் பல்வேறு பரிமாணங்களும் வெவ்வேறு வரலாறுகளும் முன்வைக்கக்கூடிய காலகட்டத்தில் ஒரு பெண் பொராளியினால் பதிவுசெய்யப்பட்டுள்ள முக்கிய ஆவணம் இது.  புஷ்பராணியின் இளைய சகோதரரே  ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் என்ற நூலை எழுதிய சி. புஷ்பராஜா என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏனைய பதிவுகள்

Wolf

Articles How to withdraw bonus cash from Royal Vegas casino – The new Wolf Wolfito Infants The big Bad Exactly how Did The new Song