ஜோன் றிச்சார்ட்சன். கொழும்பு 5: சமூக விஞ்ஞானிகள் சங்கம், 12, சுலைமான் டெர்ரஸ், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2008. (கொழும்பு: குமரன் புத்தக இல்லம், 361, ½ டாம் வீதி)
x, 110 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.
போரின் படிப்பினைகள் என்ற தலைப்பில் ஏககாலத்தில் சிங்கள, தமிழ் மொழிகளில் வெளியிடப்பட்ட நூல். 1987இல் நடந்ததொரு கலந்துரையாடலின்போது எழுப்பப்பட்ட இலங்கை போர் நிலைமைக்கு எவ்வாறு வரமுடிந்தது என்ற கேள்விக்கான பதிலாக இந்நூல் அமைந்துள்ளது. தொடர்ந்து நீடித்துச் செல்லும் வன்முறையுடன் கூடிய மோதலின் செலவுகளும் பயன்களும், இந்நிலைமை எவ்வாறு தோன்றியது: இலங்கையின் உள்நாட்டுப் போர்களிலிருந்து கற்றுக்கொள்ளல், அழிவுகரமான மோதலையும் பயங்கரவாதத்தையும் தடுத்துநிறுத்துதல்: அவசரமாகச் செய்யவேண்டிய பத்துக் காரியங்கள் ஆகிய மூன்று தலைப்புகளின்கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ஜோன் றிச்சார்ட்சன் அமெரிக்க பல்கலைக்கழகங்களின்சர்வதேச சேவைகளுக்கான பள்ளியில் சர்வதேச அபிவிருத்தி பேராசிரியராகவும்அதே பல்கலைக்கழகத்தின்கற்பித்தலுக்கான சிறப்பு மையத்தின் இயக்குநராகவும் பணியாற்றுகின்றார். இலங்கையிலுள்ள கொழும்புப் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவிலுள்ள மசசூசட்ஸ் தொழில்நுட்பத்திற்கான நிறுவனம் ஆகியவற்றின் வருகைதரு புலமையாளராகவும் இருந்துள்ளார்.