8922 உலகளாவிய தமிழ்: தொகுதி 1: உலகத் தமிழ்ப் பண்பாட்டியக்கவியல்.

ஈழத்துப் பூராடனார் (ஆசிரியர்), எட்வேர்ட் சந்திரா (துணை ஆசிரியர்), அன்புமணி இரா. நாகலிங்கம் (பதிப்பாசிரியர்). கனடா: நிழல் வெளியீடு, ஜீவா பதிப்பகம்,1108, Bay Street, Toronto, Ontario M5S 2W9,  1வது பதிப்பு, செப்டெம்பர் 1989. (கனடா: ரிப்ளக்ஸ் பிரிண்டிங், 1108, Bay Street, Toronto, Ontario M5S 2W9).

xx, 96 பக்கம், புகைப்படங்கள், விலை: கனேடிய டொலர் 12.00, அளவு: 21×14 சமீ.

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், உலகத் தமிழர் எண்ணிக்கை, உலகத் தமிழ்ப்பண்பாட்டியக்க நடைமுறை விதிகள், கி.பி.20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கடல்கடந்து வாழ்ந்த தமிழர்களின் தமிழ்ப்பணி, முத்தமிழ் முத்து மொரிஷியஸ் தீவு, மொரிஷியஸ் தீவில் 250 வருடங்களுக்குப் பின்னர்  உலகத் தமிழர் ஒன்றுகூடினர், உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடுகளும் அவற்றின் பிரதிபலிப்புகளும், றியூனியன் தீவில் வாழும் தமிழர்கள், உலகளாவி நிற்கும் தமிழ், கடல்கடந்த நாடுகளில் தமிழ் மொழிக் கல்வி, உலகத் தமிழரின் தமிழ் மொழிக் கல்வியும் வாழ்வியற் பயிற்சிகளும், முன்பொருபோது தமிழ் வளர்ந்த அழகிய பீஜித் தீவு, உலகளாவிய கிளைகள், உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கமும் அதன் உலகளாவிய தொடர்புகளும், தமிழ்-தமிழர்-தமிழ்ப்பண்பாடு-தமிழினம், ஆகிய தலைப்புகளின்கீழ் 98 உபதலைப்புகளில் உலகத்தமிழர் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. பின்னிணைப்பாக ஐந்தாவது பேராளர் மாநாடு, தீர்மானங்கள், விருதுகளும் பட்டயங்களும், உலகத் தமிழ் இயக்கங்கள் ஆகிய விபரங்களும் காணப்படுகின்றன.  (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 25267).

ஏனைய பதிவுகள்

GonzoCasino 123 no-deposit free revolves

Articles Spinamba exclusive 50 no deposit 100 percent free revolves incentive All star Harbors Casino Bonus Codes Neptune Gambling establishment: Claim A great a hundred%

8140 காப்பதில் வல்ல கருட பகவான்.

ப.சிவானந்த சர்மா (புனைபெயர்: கோப்பாய் சிவம்). யாழ்ப்பாணம்: சர்வானந்தமய பீடம், கந்தசாமி கோவிலடி, இணுவில், சுன்னாகம், 2வது பதிப்பு, செப்டெம்பர் 2012, 1வது பதிப்பு, 2.9.2012. (சுன்னாகம்: ஸ்ரீ வித்யா கணினி அச்சகம், இணுவில்).