சஞ்சயன். United Kingdom: எழுநா ஊடக நிறுவனம், 4, Kettering Road, Isham, Kettering, NN14 1HQ, 1வது பதிப்பு, ஜனவரி 2013. (சென்னை 6000005: எஸ்.வி.பிரின்ட்ஸ்).
83 பக்கம், விலை: இந்திய ரூபா 50., அளவு: 21.5×13.5 சமீ. ISBN: 978-81-908076-8-5.
போரின் சகல அடிகளையும் மௌனமாகத் தாங்கித் தாம் அழிவுற்ற கதைகளை வெளிச்சொல்ல வழியேதுமற்று புதைந்துகிடந்த கிழக்கிலங்கையின் படுவான்கரைப் பிரதேச மக்களினதும் விடுதலைப்போரில் இணைந்து போராடி இன்று எல்லோராலும் கைவிடப்பட்டிருக்கும் அப்பிரதேசத்தின் முன்னாள் போராளிகளினதும் கதைகளை இந்நூல் பேசுகின்றது. இப்பிரதேசத்தில் 2012இல் பயணித்துத் தான் பெற்ற அனுபவங்களை சிறு குறிப்புக் கட்டுரைகளாக எழுதுகின்றார். பலநூறு கேள்விகளை எழுப்பி குற்ற உணர்ச்சியை நம்மில் பரவவிடும் மௌனத்தின் குரல்களாக இக்கட்டுரைகள் அமைகின்றன. இலங்கையில் மட்டக்களப்புப் பிரதேசத்தில், ஏறாவூரைச் சேர்ந்த சஞ்சயன் கடந்த பல வருடங்களாக நோர்வேயில் வசித்து வருகின்றார். நோர்வே வெளிநாட்டவர் திணைக்களத்தில் கணனித்துறை ஆலோசகராகப் பணியாற்றுகிறார். 1980களிலிருந்து எழுதும் இவர் 2006இன் பின்னர் www.visaran.blogspot.com என்னும் வலைப்பதிவு மூலமாக தன்னுடைய வாழ்வியல் அனுபவங்களையும் படைப்புக்களையும் தொடர்ச்சியாகப் பதிவுசெய்து வருகிறார். தன் தொடர்புகளின் மூலம் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ்க் குடும்பங்களுக்கு பொருளாதார வசதிகளையும் பெற்றுக்கொடுத்து வருகின்றார்.