8953 அரசியல் சினிமா: பதினாறு இயக்குநர்கள்.

ஜமுனா ராஜேந்திரன்.லண்டன் E126BT: தமிழர் தகவல் நடுவம், Tamil House, 720, Ramford Road, இணை வெளியீட்டாளர், சென்னை 600078: நிழல், 31/48 ராணி அண்ணா நகர், கே.கே.நகர், 1வது பதிப்பு, டிசம்பர் 1997. (சென்னை 600005: ஆர்.என்.ஆர்.பிரின்டர்ஸ்).

304 பக்கம், விலை: ரூபா 75., அளவு: 20×13.5 சமீ., ISBN: 1-852010-11-8.

தமிழகத்தைச்சேர்ந்த ஜமுனா ராஜேந்திரன் லண்டனில் புலம்பெயர்ந்து வாழ்பவர். ஈழத்தமிழர்களுடன் நெருங்கிய தொடர்புள்ளவர். புலம்பெயர் ஈழத்தமிழரிடையே சினிமா பற்றிய புதிய பிரக்ஞையை வளர்த்தெடுப்பதில் அதீத அக்கறை காட்டுபவர். இந்நூலில் ஐந்து இந்திய இயக்குநர்களினதும், மூன்று மூன்றாமுலக இயக்குநர்களினதும், எட்டு ஐரோப்பியஃஅமெரிக்க இயக்குநர்களினதும் படைப்புக்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. கம்யூனிஸ்ட் கட்சிகளின் புரட்சிகர அரசியல், தேசிய விடுதலைப் போராட்டங்கள், பாசிஸ்ட் எதிர்ப்புப் போராட்டங்கள், உள்நாட்டுக் கிளர்ச்சிகள், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்கள், நமது நூற்றாண்டின் நம்பிக்கைகளின் வீழ்ச்சி போன்றவற்றின் இடையே வாழ நேர்ந்த படைப்பாளிகள் இவர்கள். இல்மஸ் குணே, கென்லோச், அகிரா குரசோவா, அலன் பார்க்கர், நீல் ஜோர்டன், ஸத்யஜித் ரே, சேகர் கபூர், மைக்கல் ரெட்போர்ட், ரோமன் போலன்ஸ்கி, கோஸ்டா காவ்ரஸ், அடூர் கோபாலகிருஷ்ணன், மார்கரட் வான் ட்ரோட்டா, மீரா நாயர், தோமஸ் கிதராஸ் அலியா, ஆலிவர் ஸ்டோன், ரித்விக் கடக் ஆகிய பதினாறு இயக்குநர்கள் பற்றியும் அவர்களது படைப்புகள் பற்றியும் இந்நூல் விரிவாகப் பேசுகின்றது.

ஏனைய பதிவுகள்