8973 ஒரு போராளியின் கடிதம்  (வீரம் விளைந்த ஈழம் 3).

ஜெகத் கஸ்பார். சென்னை 600014: நக்கீரன் பப்ளிக்கேஷன்ஸ், 105, ஜானி ஜான்கான் ரோடு, 1வது பதிப்பு, 2010. (சென்னை 600014: சாருபிரபா பிரின்டர்ஸ்).

192 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 150., அளவு: 21.5×13.5 சமீ., ISBN: 978-93-81020-08-1.

வெரித்தாஸ் வானொலியின் முன்னாள் நிகழ்ச்சித் தயாரிப்பாளரான அருட்தந்தை ஜெகத் கஸ்பர் அவர்கள் தமிழகத்தில், நக்கீரன் பத்திரிகையில் எழுதிய ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பான  கட்டுரைத் தொடரொன்று மறக்க முடியுமா என்ற தலைப்பில்  நீண்டகாலம் வெளிவந்தது. இத் தொடரின் முதல்  56 அத்தியாயங்கள் இரு நூல்களாக வீரம் விளையும் ஈழம், பேசுகிறார் பிரபாகரன் ஆகிய தலைப்புகளில் முன்னர் வெளியிடப்பட்ட நிலையில்,  இதன் தொடர்ச்சியாக மேலும் இரு நூல்கள் ஒரே தடவையில் வெளியிடப்பட்டன. ஒரு போராளியின் கடிதம் என்ற தலைப்பிலும் தமிழர்களே தமிழர்களே என்ற தலைப்பிலும் வெளியாகிய இத்தொடர்க்கட்டுரை வரிசையில் அமைந்த மூன்றாவது நூல் இதுவாகும்.  துசாந்தன் என்ற இளம் போராளி நக்கீரனில் வெளியான கஸ்பரின் மறக்க முடியுமா தொடரை படித்துவிட்டு உணர்வுவயப்பட்ட எழுதிய கடிதம் இத்தொகுப்பின் முக்கிய அம்சமாகின்றது.  நூலின் தலைப்பும் அதையொட்டியே வழங்கப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Excel Freight Systems Ltd , Cutesy Pie 意味

Content Lobstermania legal casino | Explore Effective And You Will Psychological Terms Cutie Cake Pornography Video Allt Handlar Om Kärlek I Cutesy Cake! 形容詞としての「cute」の使い方 Favorite