8996 மேலைக் கடலில் ஈழக் காற்று: இது ஓர் ஒளிக்கலைஞனின் படப்பதிவும் மனப்பதிவும்.

த.கவியரசு. சென்னை 600078: சோழன் படைப்பகம், 5D, பொன்னம்பலம் சாலை, கே.கே.நகர், 1வது பதிப்பு, மார்ச் 2009. (சென்னை: அம்மன் பிரிண்டிங் வேர்க்ஸ்).

232 பக்கம், விலை: இந்திய ரூபா 125., அளவு: 21.5×14 சமீ.

கவியரசு  தமிழகத்தின் நாமக்கல் அருகே பாண்டமங்கலத்தைச் சேர்ந்தவர். சென்னை திரைப்படக் கல்லூரியின் ஒளிப்பதிவுத்துறையில் கற்றவர். ஈழத்தமிழ் ஆர்வலர்களால் லண்டனில் எடுக்கப்பட்ட தூண்டில் என்ற படத்தின் ஒளிப்பதிவாளராகப்பணியாற்றி இரு மாதங்கள் வரையில் லண்டனில் தங்கியிருந்து ஈழத்தமிழர்களுடன் நெருங்கிய தொடர்பகொண்டவர். புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய தவறான அபிப்பிராயத்தை நீக்கும் வகையில், “உறவுகளை விட்டுச் சுயநலத்துடன் போருக்குத் தப்பியோடி சுகவாழ்க்கை வாழ்பவர்கள்” என்ற பிழையான எண்ணத்தைப் போக்கத் தனக்கு இந்த இருமாத லண்டன் வாழ்க்கை உதவியதாகக் கருதும் கவியரசு, தூண்டில் படப்பிடிப்பின் சுவையான அனுபவங்களையும், புலம்பெயர்ந்தும் மனம்பெயராத ஈழத்தமிழரின் உணர்வுபூர்வமான வாழ்வியலையும் இணைத்து இம்மனப்பதிவினை வழங்கியிருக்கிறார்.

ஏனைய பதிவுகள்

Voor Casinogeld Geen Aanbetaling

Inhoud Crocodopolis online slot – Oude Bedrijf Van Roe Frites Worden Online Gokhuis Kosteloos Spins Buitenshuis Aanwending Fijngevoelig Voor Een Zeker Plusteken Geloofwaardig Offlin Gokhal