இராசதுரை சுகுமார். யாழ்ப்பாணம்: கணனிப் பிரிவு, கொக்குவில் இந்துக் கல்லூரி, கொக்குவில், 2வது பதிப்பு, ஜுலை 2006, 1வது பதிப்பு, மார்ச் 2006. (அச்சக விபரம் தரப்படவில்லை).
xvi, 78 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 23.5×18.5 சமீ., ISBN: 955-96615-0-0.
இலங்கை அரசினால் 2006ம் ஆண்டு க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பாடத்திட்டத்திற்கான முதலாவது பரீட்சை 2007ம் ஆண்டில் நடைபெறவிருந்த நிலையில், அப்பாடத்திட்டத்தின் ஏழு அலகுகளில் முதல் இரு அலகுகளையும் உள்ளடக்கி எழுதப்பட்ட உப பாடநூல் இது. இந்நூலாசிரியர், கொக்குவில் இந்துக் கல்லூரியின் கணனிப்பிரிவுக்கான ஆசிரியராகப் பணியாற்றுகின்றார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39233).