வி.தனபாலசிங்கம் (தொகுப்பாசிரியரும் பதிப்பாசிரியரும்). கொழும்பு 15: தினக்குரல் பப்ளிக்கேஷன்ஸ் லிமிட்டெட், 68, எல்லி ஹவுஸ் வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2011. (Colombo: ANCL Commercial Printing Department).
224 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27×22 சமீ.
தினக்குரல் இலங்கையில் இருந்து வெளிவரும் தமிழ் நாளிதழ் ஆகும். இப்பத்திரிகை வீரகேசரி ஆசிரியர்களுக்கு இடையேயான கருத்து முரண்பாடுகள் கதரணமாக 1997 ஆம் ஆண்டில் பொன் ராஜகோபால் தலைமையில் பிரிந்து வெளியேறிய ஆசிரியர்களால் உருவாக்கப்பட்ட பத்திரிகையாகும். தினக்குரல், வடக்கு கிழக்குப் பகுதிகளில் மிகவும் அறியப்பட்ட நாளிதழ் என்றாலும் ஓராண்டிற்கு மேலாக இலங்கையின் கிழக்கு மாகாணமான திருக்கோணமலை, மட்டக்களப்பில் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளால் தடை செய்யப்பட்டிருந்தது. தினக்குரல் யாழ்ப்பாணத்திற்கு தனியான பதிப்பும் ஏனைய இடங்களுக்குத் தனியான பதிப்புமாக வெளியிடப்படுகிறது. 1997-2011 காலகட்டத்தில் இலங்கையின் தமிழ், தமிழர், தமிழ் பேசும் மக்களின் மேலுமொரு முக்கிய அரசியல்; குரலாக மேற்கிளம்பிய தினக்குரல் பத்திரிகையின் 15ஆவது அகவைப் பூர்த்தியைக் கொண்டாடும் முகமாக 6.4.2011 அன்று வெளியிடப்பட்ட சிறப்பு மலர்.