7044 மேலைத்தேய கீழைத்தேய மெய்யியல் பகுதி 1.

வினாவிடை 350. க.கணேசராஜா. காரைதீவு (கிழக்கு மாகாணம்): சக்தி கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, ஜுன் 2001. (அக்கரைப்பற்று: செலெக்ஷன் பிரின்டர்ஸ்).

vii, 91 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 110., அளவு: 20×14 சமீ.

ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல்துறை விரிவுரையாளரான நூலாசிரியர் எழுதிய இந்நூல் மாணவர்களின் பாடப்பயிற்சியை பொது அறிவு நிலையிலும், தேர்வு நோக்கிலும் வலுவுள்ளதாக்குவதற்கு வழிகாட்டியாக அமைகின்றது. மாணவர்களின் பாடப்பரப்பிற்கு ஏற்றவகையில் மிகைப்படுத்தலோ குறைபாடோ இல்லாத வகையில் நூல் அமைக்கப்பட்டுள்ளதாக இந்நூலுக்கு ஆசியுரை வழங்கிய உபவேந்தர் எம்.எல்.ஏ.காதர் குறிப்பிட்டுள்ளார். அளவையியல் (ஐரோப்பிய, இந்திய அளவையியல்கள்), மெய்யியல் (மேலைத்தேய, கீழைத்தேய, முஸ்லிம் மெய்யியல்கள்), உளவியல், ஒழுக்கவியல், அழகியல், சிறுவிளக்கக் குறிப்புகள் ஆகிய பிரிவுகளில் இத்துறைசார் விடயங்கள் பகுத்து வழங்கப்பட்டுள்ளன. சிறுவிளக்கக் குறிப்பில் கார்ல் பொப்பர் (தொழிற்பாட்டு வாதம்), விக்கன்ஸ்ரைன் (பல்பெறுமான அளவையியல்), தோமஸ் கூன் (ஒழுக்கவியலின் இயற்கைப் போலி), பேட்ரன் றசல் (அளவையியலும் அறிவாராய்ச்சியியலும்), மாஸ்லோ (நீதி), பியாஜோ (நியம ஒழுக்கவியலும் அதீத ஒழுக்கவியலும்) ஆகிய மெய்யியலாளர்களின் கொள்கைகள்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 544462).

ஏனைய பதிவுகள்

Play Blackjack

Content Free Blackjack Vs Real Money Blackjack How To Play Free Blackjack Online? Learn A Top Blackjack Strategy Play Free Blackjack Games Online 175+ Titles