வெற்றிவேல் சக்திவேல். தெல்லிப்பளை: மா.வெற்றிவேல், கிளவ் வீதி, 1வது பதிப்பு, ஐப்பசி 2005. (யாழ்ப்பாணம்: கங்கை பதிப்பகம், 781, சிவலிங்கப் புளியடி).
(4), 50 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20.5×14.5 சமீ.
சைவப்புலவரும், சித்தாந்த பண்டிதருமான இந்நூலாசிரியர் ஒரு சித்த மருத்துவராவார். மாணவர் வாழ்வில் வெற்றிபெற உதவும் கட்டுரைகளான குழந்தை உளவியற் சிந்தனைகள், ஆளுமையும் உளவியலும், ஞாபக மறதியும் உளவியலும் ஆகிய கட்டுரைகளும், சமூக உறவுகளை மேம்படுத்தக்கூடிய வகையில் அமைந்த குடும்ப உறவும் உளவியலும், பெண்களும் உளவியலும், மதுவும் உளவியலும், அச்சமும் உளவியலும் ஆகிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. தமிழ்மரபில் உளவியல் ஆய்வுநோக்கு என்ற கட்டுரை தமிழ் இலக்கியங்களிலும், தமிழர் பண்பாட்டு மரபுகளிலும் காணப்படும் உள மருத்துவ விஞ்ஞான நடைமுறைகளை ஆராய்வதாகவும், இந்து தமிழர் பண்பாட்டு மருத்துவ மரபில் யோகம் என்னும் கட்டுரை இந்து சமய நடைமுறைகளில் காணப்படும் உள, விஞ்ஞான செயற்பாடுகளை விளக்குவதோடு, பிரதானமாக-யோகாசனம், பிரணாயாமம், தியானம், ஆகியவற்றில் காணப்படும் உள மருத்துவ விஞ்ஞான நடைமுறைகளையும் ஆராய்கின்றது. மொத்தம் ஒன்பது தலைப்புகளில் அமைந்த கட்டுரைகளை இந்நூல் கொண்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 172249).