7052 பிரயோக உளவியல் 2.

பாலசுப்பிரமணியம் தனபாலன். யாழ்ப்பாணம்: பா.தனபாலன், துவாரகை வீதி, கோண்டாவில் வடக்கு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2005. (யாழ்ப்பாணம்: கங்கை பிரின்டர்ஸ், 781, காங்கேசன்துறை வீதி, சிவலிங்கப்புளியடி).

vii, 106 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், விலை:  ரூபா 200., அளவு: 20.5×14 சமீ.

Applied Psychology என்ற ஆங்கிலத் தலைப்புடனும் எழுதப்பட்டுள்ள இந்நூலின் ஆசிரியர் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரியின் உப பீடாதிபதியாவார்.  கடந்த வருடம் வெளியிடப்பட்ட முதலாம் பாகத்தின் தொடர்ச்சியாக இவ்விரண்டாம் பாகம் அமைகின்றது. இதில் பிரயோக உளவியலின் புதிய செல்நெறிகள், மனிதவள விருத்தியில் ஆளுமை, ஆளுமை விருத்தி பற்றிய உளவியற் கோட்பாடு, சமநிலை ஆளுமையின் தேவை, மனித சாதனைகளுக்கான ஊக்கல், உள ஆற்றல் திறனான நுண்மதி, பிரயோக உளவியலில் ஆக்கத்திறன், மனித வாழ்க்கைக் கால விருத்தி, மனிதர்களில் நினைவுகூறலும் மறத்தலும், வகுப்பறை முகாமைத்துவமும் உளவியலும், புலக்காட்சியும் சாயலும், எல்லா ஆசிரியர்களுக்கும் அவசியமான விசேட கல்வி, ஆற்றுப்படுத்தல் சீர்மியத்துக்கான நவீன உளவியல் பிரயோகங்கள் ஆகிய தலைப்புக்களில் பிரயோக உளவியலின் பல்வேறு பரிமாணங்களும் விளக்கப்பட்டுள்ளன. (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 604043).

ஏனைய பதிவுகள்

Gadanho Poker Texas Holdem 2022

Content Poker Brasil Online Gratis Como Funciona Barulho Slot Football Ve a Deluxe Aparelhamento Casino Online Gratis Circunstância decida aquele chegou a hora criancice abrir