பீ.எம்.ஜமாஹிர். கண்டி: இலங்கை தென் கிழக்கு ஆய்வு மையம் (South Eastern Research Forum), 303, University Staff Quarters, Dangolla, 1வது பதிப்பு, ஜுலை 2002. (கண்டி: Print-Ex Graphics).
எiii, 9-104 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20.5×14 சமீ., ISBN: 955-8194-03-4.
இந்நூலில் உளவியல் அறிமுகம் அதன் இயல்புகளும் எல்லையும், உளவியல் பயன்படுத்தும் ஆய்வுமுறைகள், உளவியலின் விஞ்ஞானத் தன்மை, பல்வேறு உளவியல் கருத்துப் பள்ளிகள் (அமைப்புவாதம், பயன்பாட்டுவாதம், நடத்தைவாதம், கெஸ்ரோல்ட் உளவியல், உளப் பகுப்பாய்வு), ஆளுமை பற்றிய கோட்பாடு, அறிகைச் செயற்பாட்டில் சிந்தனையும் மொழியும் – பியாஜேயின் அறிவுவிருத்திக் கொள்கையை அடிப்படையாகக்கொண்ட உளவியல் விளக்கம், கற்றல் என்றால் என்ன? கற்றலுக்கான ஒரு அறிமுகம், ஞாபகம் என்றால் என்ன? ஞாபகத்திற்கான ஓர் அறிமுகம், மறதி என்றால் என்ன? மறதிக்கான ஓர் அறிமுகம். பிறழ்நிலை உளவியல், ஊக்கிகள் உந்திகள் பற்றிய கோட்பாடு ஆகிய 11 இயல்களில் பொது உளவியல் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது. (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 554326).