கி.செ.துரை (இயற்பெயர்: கிருஷ்ணன் செல்லத்துரை). டென்மார்க்: அலைகள் மூவீஸ் இன்டர்நெஷனல், Ny Mollevej 30, 7400 Herning 1வது பதிப்பு, ஜுன் 2010. (சென்னை 600024: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 ஆற்காடு சாலை, கோடம்பாக்கம்).
103 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ.
அலைகள் இணையப் பத்திரிகையில் 18 நாட்கள் தொடர்ச்சியாக எழுதப்பட்ட கட்டுரைத் தொடரின் நூல் வடிவம். விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் ஆதரவு நாடுகளின் இராணுவ உதவியுடன் இலங்கை இராணுவத்தால் முறியடிக்கப்பட்ட வன்னிப்பிரதேசமான புதுமாத்தளனை ஈழத்துத் தமிழ் மக்களின் முப்பது ஆண்டு ஆயுதப்போராட்டத்தின் தோல்வியின் குறியீடாகக் காண்கின்றார் கி.செ.துரை. அந்த இழப்பின் உணர்வுபூர்வமான சோகங்களிலிருந்தும், விரக்தியிலிருந்தும் விடுபட்டு, மீண்டும் விழித்தெழுந்து விடுதலைக்காக புதிய வழிகளில் உழைப்போம் என்று நம்பிக்கையூட்டி உற்சாகப்படுத்தும் வகையில் இதிலுள்ள மனித மேம்பாட்டுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.