7065 மகிழ்ச்சியின் இரகசியம்: கட்டுரைத் தொகுப்பு.

ஜோசப் பாலா. யாழ்ப்பாணம்: மணிஓசை வெளியீடு, 12 சென். பற்றிக்ஸ் வீதி, 1வது பதிப்பு, மார்கழி 1996. (கொழும்பு 13: லக்சு கிராப்பிக்ஸ்).

68 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 19×13 சமீ.

நான் உளவியல் சஞ்சிகையின் ஆசிரியரான ஜோசப் பாலா எழுதிய 14 உளவியல் மற்றும், விழிப்புணர்வுக் கட்டுரைகளின் தொகுப்பாகும். உள்ளங்களைத் தொலைத்துவிட்டு உடல்களை அலங்கரித்து என்ன பயன், உடலை அலங்கரித்தோம், அழகுபடுத்தினோம், உள்ளங்களை அமைதிப்படுத்தினோமா என்ற கேள்வியுடன் எமது உளவியல் வாழ்வை மதிப்பீடு செய்யும் ஜோசப் பாலா, அன்றாட வாழ்வியற் சூழல் அனுபவங்களினூடாக உளவியல் பார்வையில் இதிலுள்ள 14 கட்டுரைகளையும் எழுதியுள்ளார். நோக்கை நோக்கி, விளையாட்டு விளையாட்டாக, தவறுகளைத் தவிர்ப்போம், ஏமாற்றத்தை வெல்ல மனமாற்றம் அவசியம், அனுபவம் ஒரு திருப்புமுனை, பிஞ்சுமனங்களில் நஞ்சுவிதைகளா, அனுதாபம் தேடும் அவலம், சுவைத்துப் பாருங்கள் சுமைகளைத் தீருங்கள், குதூகலக் குடும்பமாய் வாழ, அனுபவம் ஒரு பாடம், உளவளர்ச்சியில் ஓவியம், இசை என்பவற்றின் செல்வாக்கு, பார்வைகள் தரும் மனப்பதிவுகள், விடலைகளின் விசும்பல்கள், மாலையும் மகிழ்ச்சியும் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்