க.கணேசலிங்கம். லண்டன்: லண்டன் மெய்கண்டார் ஆதீனம், 72, King Edward Road, London E17 6HZ, 1வது பதிப்பு, பெப்ரவரி 2010. (சென்னை 600005: மாசறு பிரின்ட் சேர்விசஸ், 28/8, முத்துக் காளத்தி தெரு, திருவல்லிக்கேணி).
112 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.
உயர் சிவஞானபோதம், கடவுள் வாழ்த்து, அவையடக்கம், காணும் உலகம் காணாத கடவுள், போக்கும் வரவும், சைவத்தின் வினைக்கொள்கை, நான் யார்? அவத்தையுறும் ஆன்மா, காட்டாக்கால் காண்பார் ஆர்? என்றுமுள்ள பரம்பொருள், சத்துமல்ல அசத்துமல்ல, வேடருடன் வேந்தன் மகன், தண்ணிழலாம் திருவருள், மருள் நீங்கிய காட்சி, அன்பினால் இறையருள், மண்ணில் நல்ல கதி ஆகிய 16 தலைப்புகளில் அமைந்த ஆக்கங்களைக்கொண்ட நூல். இதில் சிவஞானபோதச் சூத்திரங்கள் இயன்றவரை எளிமையாக விளக்கப்பட்டுள்ளன. விளக்கும் முறையில் தொடர்புடைய சித்தாந்தக் கருத்துக்கள் ஆங்காங்கே தரப்பட்டுள்ளன. மேற்கோள், ஏது, எடுத்துக்காட்டு முதலியவை தவிர்க்கப்பட்டுள்ளன. 2010ம் ஆண்டு பெப்ரவரி 5,6,7ம் திகதிகளில் சிதம்பரத்தில் நடந்தேறிய 12ஆவது உலக சைவ மாநாட்டின் நினைவாக வெளியிடப்பட்ட நூல். யாழ்ப்பாணம், குப்பிளானைச் சேர்ந்தவரான சைவசித்தாந்த கலாநிதி சித்தாந்தரத்தினம் க.கணேசலிங்கம் இலண்டன் மெய்கண்டார் ஆதீனத்தின் ஆதீனப் புலவராவார். (இந்நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 164244).