7084 சைவ சித்தாந்த நோக்கில் கைலாசபதி ஸ்மிருதி.

மு.கந்தையா. யாழ்ப்பாணம்:யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1998. (யாழ்ப்பாணம்: ஏழாலை மஹாத்மா அச்சகம், கந்தர்மடம்).

xv, 581 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22.5×14.5 சமீ.

சைவாசிரிய கலாசாலையில் உப அதிபராயிருந்தவர் பொ.கைலாசபதி. அவரது நன்மாணாக்கருள் ஒருவரே பண்டிதமணி கணபதிப்பிள்ளையாவார். தம் கருத்துக்களைக் கூறுவதற்கு பண்டிதமணியையே தகுதியுடையவராகக் கண்டார் கைலாசபதி.அவரது சைவசித்தாந்தக் கருத்துக்களை பண்டிதமணியவர்கள் அப்பியாசக் கொப்பிகளில் அவ்வப்போது எழுதி வைத்திருந்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அவற்றைத் தொகுத்து பின்னாளில் பொ.கைலாசபதி அவர்களின் சிந்தனைகள் என்ற நூலுருவில் வெளியிட்டது. பின்னர் அவரது கருத்துக்களை உள்வாங்கி அவற்றுக்கு எளிய விளக்கமளிப்பதாக ஏழாலைப் பண்டிதர் மு.கந்தையாவின் இந்த நூல் அமைகின்றது. சைவ மெய்யியல் பற்றி முதலாம் பிரிவிலும், ஸ்மிருதி இயல் பற்றி இரண்டாம் பிரிவிலும் இந்நூல் விளக்குகின்றது. சைவ மெய்யியலில்  சைவம் -சைவசித்தாந்தம், இலௌகிகம்-சைவசித்தாந்தம், வேதம்-சிவாகமம், சிவாகமங்கள், பத்ததிகள், திருமுறைகள், அகப்புறச் சைவத் தொகுதிகள், அஷ்டப் பிரகரணம், ஞானாமிர்தம், சர்வஞ்ஞானோத்தரம், தமிழ்ச் சைவ சாஸ்திரங்கள், சைவ மெய்யியலின் முக்கிய அம்சங்கள் ஆகிய விடயங்கள் இடம்பெறுகின்றன. ஸ்மிருதி இயலில் ஸ்மிருதிப் பெயர், இந்து ஸ்மிருதி வரலாறு,  ஸ்மிருதிப் பொருள், உட்கண்கள், புத்தி-அகங்கார விருத்தித் தொடர்பு,  விமர்சனம், ஸ்மிருதி வழிவழி, ஸ்மிருதி இயலின் முக்கிய அம்சங்கள் ஆகிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21154).

ஏனைய பதிவுகள்

13492 காச நோய்.

சி.யமுனானந்தா. யாழ்ப்பாணம்: வைத்திய கலாநிதி சி.யமுனானந்தா, மாவட்ட காசநோய்க் கட்டுப்பாட்டு அதிகாரி, மார்புநோய்ச் சிகிச்சை நிலையம், பண்ணை, 1வது பதிப்பு, 2012. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி). vi, 112

15965 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கும் மற்றும் ஏனைய உயர் பரீட்சைகளுக்குமான இலங்கை வரலாறு (இரண்டாம் பாகம்) பொலன்னறுவை யுகம்-கோட்டை யுகம்.

எழுத்தாளர் குழு. கல்வி வெளியீட்டுத்திணைக்களம். கொழும்பு: கல்வி வெளியீட்டுத்திணைக்களம், இசுறுபாய, பத்தரமுல்லை, 1ஆவது பதிப்பு, 2014. (கொழும்பு: சொப்ட்வேவ் பிரிண்டிங் அண்ட் பக்கேஜிங் நிறுவனம்). vi, 338 பக்கம், விலை: ரூபா 355., அளவு: