வ.மு.இரத்தினேசுவர ஐயர். தமிழ்நாடு: முத்து க.லெ.இராமநாதன் செட்டியார், நெற்குப்பை, 1வது பதிப்பு, ஜுன் 1923. (கொக்குவில்: சோதிடப்பிரகாச யந்திரசாலை).
(20), 88 பக்கம், விலை: 50 சதம், அளவு: 20.5×13 சமீ.
இது யாழ்ப்பாணத்துச் சுன்னாகம் அ.குமாரசுவாமிப் புலவரின் மாணவரும், பின்னாளில் இந்தியாவில் வசித்தவரும், மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் அங்கத்தவரும் சைவப் பிரசாரகருமான உடுவில் தமிழ்ப் பண்டிதர் வ.மு.இரத்தினேசுவர ஐயரால் இயற்றப்பட்டு, மகிபாலன்பட்டி, செந்தமிழ் ஆரியமாகிய இரு பெருமொழிப் பண்டித சிரோமணி ஸ்ரீமான் மு.கதிரேசன் செட்டியாரின் முகவுரையுடன் நெற்குப்பை ஸ்ரீ சண்முகவிலாச வாசகசாலையின் அத்தியட்சகருள் ஒருவராகிய முத்து க.லெ.இராமநாதன் செட்டியாரால் வெளியிடப்பட்டது. இந்நூலில் சமயம், முதற்பொருள், நாம் யார், மும்மலமுகிழ்ப்பு, மனிதப் பிறப்பின் மகிமை, சிவபூஜை என்றும் சீரிய இன்பமே ஆகிய ஆறு சைவப் பிரச்சார உரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 8915).