த.கணபதிப்பிள்ளை, மு.சின்னப்பு. அளவெட்டி: ஆசிரியர்கள், 1வது பதிப்பு, வைகாசி 1959. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).
(2), 101 பக்கம், விலை: அன்பளிப்பு, அளவு: 18.5×12.5 சமீ.
அளவெட்டியைச் சேர்ந்த சோதிடர்களான த.கணபதிப்பிள்ளை, மு.சின்னப்பு ஆகியோர் எழுதியுள்ள இந்நூல் சோதிடம் பற்றிய அடிப்படை அறிவினை வழங்குகின்றது. சோதிடக்கலையில் பயிற்சிபெற முனைபவர்களுக்கான ஆரம்ப நூலாக இது அமைகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 140786).