7109 அறுவகைச் சமயங்கள்.

க.சி.குலரத்தினம். கொழும்பு 10: குமரன் புத்தக இல்லம், B3-G3 ரம்யா பிளேஸ், 1வது பதிப்பு, 2010. (கொழும்பு 10: குமரன் புத்தக இல்லம், B3-G3 ரம்யா பிளேஸ்).

viii, 90 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-174-3.

இந்துசமயத்தின் பல்வகைச் சமய வழிபாட்டு நெறிகளையும் விளக்கும் ஆசிரியர், சண்மதங்கள் என அழைக்கப்படும் அறுவகைச் சமயங்களான சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணாபத்தியம், சௌரம் ஆகிய வைதீக சமயங்களைப்பற்றிய தகவல்களைத் தனித்தனி இயல்களாக்கி இந்நூலில் விளக்குகின்றார். சிவனை வழிபடும் சைவம், திருமாலை வழிபடும் வைணவம், சக்தியை வழிபடும் சாக்தம், கணபதியை வழிபடும் காணபத்தியம், முருகனை வழிபடும் கௌமாரம், சூரியனை வழிபடும் சௌரம் ஆகிய இவ்வறுவகைச் சமயங்களைப்பற்றிய விரிவான தகவல்களை இந்நூல் வழங்குகின்றது. க.சி.குலரத்தினம் (1916-1994) யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் பிறந்தவர். பரமேஸ்வராக் கல்லூரியில் கல்வி கற்றபின்னர் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையிலும், திருநெல்வேலி சைவாசிரியர் பயிற்சிக் கலாசாலையிலும் பயின்றவர். திருநெல்வேலி செங்குந்தா இந்துக் கல்லூரி, சைவப்பிரகாச வித்தியாசாலை உட்பட பல கல்லூரிகளில் ஆசிரியராகப் பணியாற்றியபின்னர் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். யாழ்ப்பாணத்தில் மில்க்வைற் செய்தி என்ற சிறுசஞ்சிகையின்  கௌரவ ஆசிரியராக இருந்து ஒரு வர்த்தக இதழை சுவைமிகு அறிவியல் இதழாக நடத்திக்காட்டியவர்.

ஏனைய பதிவுகள்

Free 5 Reel Slot machine games

Posts Pokie guns n roses – Visit Quick Strike Las vegas Slots Real cash Against Jackpot Slots 100 percent free Games Greatest All of us

Free Online Video Poker Games

Content Online Casinos With Konami Games | wms games online Why Play Our Free Video Poker Games? Most Popular Games The various flavours of the