7125 நல்லூரான் அருமருந்து.

பொ.சந்திரசேகரம் (பதிப்பாசிரியர்). சுன்னாகம்: திருமதி சின்னப்பிள்ளை பொன்னுத்துரை அவர்களின் ஞாபகார்த்த வெளியீடு, 1வது பதிப்பு, டிசம்பர் 2010. (சங்கானை: சாய்ராம் பிரின்டர்ஸ்).

xii, 218 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.

இந்நூலின் பதிப்பாசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளராவார். தனது தாயாரின் மறைவையொட்டி இந்நூலைத் தொகுத்து வழங்கியுள்ளார். எனது பெற்றோரும் யாழ்ப்பாணச் சமூகமும் என்ற தனது விரிவான கட்டுரையில் யாழ்ப்பாணத்துச் சாதிய சமூக வழமைகள் பற்றிய தனது மனப்பதிவுகளை ஆசிரியர் பதிவுசெய்கிறார். தொடர்ந்து வ.அ.தங்க மயில் இயற்றிய திதி நிர்ணயம், செம்மை ஒரு மொழி அம்மையே, ஆகிய செய்யுள்களும், தொடர்ந்து மூத்த நாயனார் திருவிரட்டை மணிமாலை, நற்சிந்தனை, திருமுருகாற்றுப்படை, கந்தரனுபூதி, சண்முக கவசம், திருவிசைப்பா, நல்லைநகர் கந்தன் திருவூஞ்சல், சைவசமயம், திருநீற்று இயல், திருக்கோயில் வழிபாட்டியல், சோதிடவியல் ஓர் அறிமுகம் ஆகிய அம்சங்களும் தொகுக்கப்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

On-line casino Reviews

Content Slot Organization Exactly why do Casinos Provide Bettors With A no cost ten No deposit Extra? Shell out By Cellular Casino British Gamble sensibly