7132 இலண்டன் சிவன் கோயில்: வரலாறும் அனுபவங்களும்.

நடராசா சச்சிதானந்தன். லண்டன்: அம்பனை கலைப்பெரு மன்றம், 49, Ravensbourne Park Crescent, Catford, London SE6 4YG, 1வது பதிப்பு, 2011. (லண்டன்: Jay Maarxs Printers).

viii, 116 பக்கம், வண்ணப் புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18.5 சமீ.

லூஷியம் சிவன் கோவில் என அறியப்பட்ட இலண்டன் சிவன் கோயில் 1993இல் உருவாக்கப்பட்டு வளர்ச்சிபெற்ற வரலாறும் சமூகப் பிரமுகர்களின் பங்களிப்புகளும் இந்நூலில் 44 ஆக்கங்களின் உருவில் விரிவாகத் தரப்பட்டுள்ளது. குத்தகைக்காணியில் அமைந்துள்ள இக்கோயில் சொந்தக்காணியில் நிறுவப்படவேண்டும் என்ற கருத்தை இந்நூல் முன்வைக்கின்றது. நூலாசிரியர் சச்சிதானந்தன் இலங்கை, இணுவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர். உரும்பிராய் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான இவர் புலம்பெயர்ந்து, 44 ஆண்டுகளுக்கும் மேலாக லண்டன் லூஷியம் பகுதியில் வாழ்பவர். பொதுப்பணிகளில் ஆர்வம் மிக்க இவர் 1970-80 காலகட்டத்தில் லண்டன் தமிழ்ச்சங்கத்தின் செயலாளராகவும், 1980களில்  The Central British Fund for Tamil Refugees Rehabilitation என்ற அமைப்பின் நிர்வாகியாகவும் சேவையாற்றியவர். தமிழர் தகவல் மையத்தின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவரான இவர், இன்று லூஷியம் தமிழ்ப் பாடசாலையாக இயங்கும் கர்நாடக இசைப்பள்ளியை ஆரம்பித்தவர். 1998இல் பிரித்தானிய சைவத்திருக்கோயில்கள் ஒன்றியத்தை ஆரம்பித்து முதலாவது செயலாளராகவும் பணியாற்றியவர். 2008ஆம் ஆண்டில் தமிழர் பிரச்சினை பற்றி இலங்கை அரசுடனான உரையாடலுக்காகச் சென்ற குழுவிலும் இடம்பெற்றிருந்தார். பின்னர் 12.8.2008இல் சிவன் கோவில் அறங்காவல் குழுவினரால் அறங்காவலர் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டார். தனது பக்க நியாயங்களையும், தனது பணிகள் பற்றி பல்வேறு சமூகப் பிரமுகர்கள் கொண்டிருந்த கருத்துக்களையும் இந்நூலில் இவர் பரவலாகப் பதிவுசெய்திருக்கிறார்.

ஏனைய பதிவுகள்

What is Mini Limits Casino poker?

Posts Research paper assistance site: Microstakes Grinders “ideal” Stats Consent Otherwise Differ? Exactly what are Your Statistics? Zoom Web based poker Is simply More lucrative

Kitty Sparkle Slot machine

Articles Do you know the Top On the web Real cash Harbors Game Inside the The us? Greatest Flames Connect Dollars Drops China Street Slot

7375 கிரியா யோகப் பாதை: உன்னையே உன்னிடம் அழைத்துச் செல்லும்.

இரா.சுதாஸ் (இயற்பெயர்: இராசக்கோன் சுதாஸ்). தெகிவளை: BBS Netting, 3/14 பின்வத்தை ரோட், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2008. (கொழும்பு: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44 புகையிரதநிலைய வீதி, தெகிவளை). viii, 66 பக்கம், சித்திரங்கள், விலை: