7142 வேலணை மேற்கு பெரியபுலம் மகாகணபதிப் பிள்ளையார் (முடிப்பிள்ளையார் ஆலயம்) மகாகும்பாபிஷேக சிறப்புமலர்.

செ.பாலச்சந்திரன் (மலராசிரியர்). வேலணை: ஆலய பரிபாலனசபை, வேலணை மேற்கு, 1வது பதிப்பு, மே 1990. (அச்சக விபரம் தரப்படவில்லை). 

(6), 115 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18.5 சமீ.

மேற்படி ஆலயத்தின் மகாகும்பாபிஷேகம் 11.4.1990இலும், மண்டலாபிஷேகம் 25.5.1990இலும் நடைபெற்ற வேளையில் வெளியிடப்பட்ட சிறப்பு மலர். மலர் ஆசிரியர் குழுவில் செ.பாலச்சந்திரன், மு.திருஞானசம்பந்தபிள்ளை, பொன் அருணகிரிநாதன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். வாழ்த்துரைகள், ஆசியுரைகளுடன், மூன்று பிரிவுகளில் கட்டுரைகளும் இடம்பெறுகின்றன. முதலாவது பிரிவில், மேற்படி கோவில் பற்றியும் அது சார்ந்த நிறுவனங்கள் பற்றியுமான வரலாற்றுப் பதிவுகளாக ஆறு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இரண்டாம் பிரிவில் பெரியபுலம் மகா கணபதி பேரில் பாடப்பெற்ற பதிகங்கள், திருஊஞ்சல், திருஅகவல் போன்ற பக்தி இலக்கியங்கள் எட்டு இடம்பெறுகின்றன. மூன்றாம் பிரிவில் கணபதி வழிபாட்டு நெறி (சந்திரலேகா வாமதேவா), விநாயக தத்துவம் (வி.சிவசாமி), கும்பாபிஷேக முறைகளும் விளக்கங்களும் (ஐ.கைவலாசநாதக் குருக்கள்), வேதங்கள் வழிவந்த இந்துப் பண்பாட்டு மரபுகள் (ப.கோபாலகிருஷ்ணன்), கிறிஸ்து சகாப்தத்திற்கு முன் ஈழத்தில் வாழ்ந்த பிராமண குலங்கள் பற்றிய இலக்கியச் சான்றுகள் (சி.க.சிற்றம்பலம்), இடஞ்சார்பு அபிவிருத்தித் திருமுறைகள் (பொ.பாலசுந்தரம்பிள்ளை), பண்பாட்டுத் தரத்துக்கு கோயில்களின் பங்களிப்பு (இ.முருகையன்), நீர்வளத்தைப் பேணுவோம் (செ.பாலச்சந்திரன்), திருப்பணி வளர்ச்சிக் கண்ணோட்டம் (பொ.கேதாரநாதன்) ஆகிய ஒன்பது ஆய்வுசார் கட்டுரைகள்  இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக சுவடிக் காப்பகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் தரப்படவில்லை).

ஏனைய பதிவுகள்

Online Casino Paypal Pröjsa

Content Vilka Avgifter Är Det Gällande Siru Mobile Casino? Casino Mobiltelefon Pröjsa Fördelar Sam Nackdelar Tillsamman Siru Mobile Casino Grekiska Grundnor Och Stadgar För Spel