எம்.டி.எம்.றிஸ்வி. முறுத்தகஹமுல: வர்தா பதிப்பகம், 85C, பிட்டுனுகம, 1வது பதிப்பு, ஜனவரி 2004. (முறுத்தகஹமுல: வர்தா பதிப்பகம்).
136 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21.5×15 சமீ., ISBN: 955-98504-0-7.
இலங்கை முஸ்லிம்களின் வரலாறு, இலங்கை முஸ்லிம்களும் குடிப்பரம்பலும், வரலாற்றுப் பார்வையில் இலங்கை மஸ்ஜிதுகள், மஸ்ஜித் பற்றிய இஸ்லாமிய நோக்கும், இலங்கையில் மஸ்ஜித் சீரமைப்பும், இலங்கை மஸ்ஜித்களின் வகைகளும், பெயர்களும் அதன் வருமான வழிகளும் ஆகிய ஐந்து தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூலின் பிரதான விடயமான வரலாற்றுப் பார்வையில் இலங்கை மஸ்ஜிதுகள் என்ற இயலில் தென்மாகாண பேருவளை, வெலிகம பிரதேசத்திலுள்ள 13 மஸ்ஜிதுகள் பற்றியும், மேல் மாகாண கொழும்புப் பிரதேசத்தின் 3 மஸ்ஜிதுகள் பற்றியும், வடமேல் மாகாணத்தின் புத்தளம் முஹியுத்தீன் பெரிய ஜும் ஆப் பள்ளிவாசல் பற்றியும், மத்திய மாகாண கண்டிப் பிரதேசத்திலுள்ள 6 மஸ்ஜிதுகள் பற்றியும், கிழக்கு மாகாண காத்தான்குடி, ஏறாவூர், வாழைச் சேனை, ஓட்டமாவடி, மீரா ஓடை, பிரதேசத்தின் 8 மஸ்ஜிதுகள் பற்றியும், வடமத்திய மாகாண பொலந்நறுவைப் பிரதேசத்தின் 2 மஸ்ஜிதுகள் பற்றியும் விரிவான வரலாற்றுத் தகவல்கள் தரப்பட்டுள்ளன. இந்நூலாசிரியர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரபு, இஸ்லாமிய நாகரிகத்துறையின் விரிவுரையாளராவார். (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 572001).