க.சண்முகலிங்கம். கொழும்பு 10: குமரன் புத்தக இல்லம், B3-G3 ரம்யா பிளேஸ், 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 10: குமரன் அச்சகம், B3-G3 ரம்யா பிளேஸ்).
xvi , 140 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-659-274-0.
இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும் என்னும் பொதுத் தலைப்பில் 12 கட்டுரைகளை இந்நூல் கொண்டுள்ளது. இலங்கையின் சிங்கள, தமிழ்ச் சமூகங்களின் சாதிக்கட்டமைப்பு பற்றி சமூகவியல், மானிடவியல் அடிப்படையில் விரிவாக எடுத்துரைக்கிறது. வெவ்வேறு சமூகங்களின் உட்புறத்தையும், அவற்றின் முரண்பட்ட உள்ளடுக்குகளையும் நூலாசிரியர் வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறார். பிறைஸ் றயான், நூர் யல்மன், மைக்கல் பாங்க்ஸ், மக் ஜில்வ்ரே, ஜனிஸ் ஜிஜின்ஸ், ஒட்வார் ஹொலப் ஆகிய மேற்குநாட்டு ஆய்வாளர்களாலும், மைக்கல் ரொபர்ட்ஸ், ஏ.ஜே.வில்சன், நியுட்டன் குணசிங்க ஆகிய இலங்கையின் அறிஞர்களாலும் எழுதப்பட்ட ஆய்வு நூல்களிலிருந்தும் கட்டுரைகளில் இருந்தும்பெற்ற கருத்துக்களைத் தொகுத்தும் சுருக்கியும் வழங்கியுள்ளார்.
இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்.
க.சண்முகலிங்கம். சென்னை 600 083: சந்தியா பதிப்பகம், புதிய எண் 77, 53ஆவது தெரு, 9ஆவது அவென்யூ, அசோக் நகர், 1வது தமிழகப் பதிப்பு, 2021. (சென்னை 40: அருணா என்டர்பிரைசஸ்).
216 பக்கம், விலை: ரூபா 220., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-659-274-0.
சிங்களவர்களின் சாதியமைப்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மலையகம் ஆகிய பகுதிகளில் வாழும் தமிழர்களின் சாதியமைப்பு என்பன பற்றிய 15 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. தமிழகத்தில் வெளியான இப்பதிப்பில் அறிமுகம், சிங்கள சமூகத்தின் சாதிக் கட்டமைப்பு, கண்டிய சமூகமொன்றில் சாதி விதிகளின் தளர்ச்சி, விளிம்பு நிலையும், சமூக அசைவியக்கமும்: தென்னிலங்கையின் விளிம்புநிலைச் சாதிகளின் ச5க உயர்ச்சியின் வரலாறு, இலங்கையின் அரசிலில் சாதியும் குடும்பமும் 1947-1976, கண்டிய கிராமமான தெலும்கொடவில் சாதியும் வர்க்கமும், தேயிலைத் தோட்டமொன்றின் சமூக உருவாக்கம், மட்டக்களப்பில் சாதி, இலங்கையின் கிழக்குக் கரையோரத்தின் தமிழர்களும் முஸ்லிம்களும், யாழ்ப்பாணத்தில் சாதி, இலங்கைத் தமிழர்களின் சமூகக் கட்டமைப்பும் இன வரைவியலும், றொபெர்ட் ஹோம்ஸ் பார்வையில் யாழ்ப்பாணத்தின் சாதி முறை, மேல்நிலையாக்கம், இலங்கையின் அரசியலில் சாதி, இலங்கையில் சாதியும் அரசியலும் ஓர் வரலாற்று நோக்கு ஆகிய 15 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. முன்னைய பதிப்பில் இடம்பெறாத றொபெர்ட் ஹோம்ஸ் பார்வையில் யாழ்ப்பாணத்தின் சாதி முறை, இலங்கையின் அரசியலில் சாதி, இலங்கையில் சாதியும் அரசியலும் ஓர் வரலாற்று நோக்கு ஆகிய புதிய கட்டுரைகள் மூன்று இப்பதிப்பில் இடம்பெற்றுள்ளன.