M.S.M.அனஸ். கண்டி: பண்பாட்டு ஆய்வு வட்டம், பேராதனை, 1வது பதிப்பு, ஜுன் 1996. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).
iv, 131 பக்கம், விலை: ரூபா 130., அளவு: 21.5×14 சமீ.
விஞ்ஞானத்தின் வரலாறு (கோட்பாட்டு விஞ்ஞானம், இந்திய, சீன விஞ்ஞானங்கள், அறேபிய விஞ்ஞானம், அணு உலகம், பரிணாமவாதம்), விஞ்ஞான ஒழுக்கவியல் (சமூக நிறுவனம், சமூக உயிரியல், பிறப்பு மரபியல்), வைத்திய ஒழுக்கவியல் (சட்டக் கோவைகள், ஹிப்போக்ரட்டீஸ் பிரமாணம், நோயாளர் வைத்தியர் உறவு), சமூக விஞ்ஞானங்கள் (மனித ஆராய்ச்சி, சமூகத் தோற்றப்பாடு, சமூகவியல், பொருளியல், மானிடவியல், உளவியல்) ஆகிய நான்கு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்நூலாசிரியர், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல்துறை முதுநிலை விரிவுரையாளராவார். (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 498302).