7187 அநாமதேயங்களாக இருந்தோர் அறியப்பட்டவர்களானமை: இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்.

குமாரி ஜயவர்த்தன (ஆங்கில மூலம்), க.சண்முகலிங்கம் (மொழிபெயர்ப்பு). கொழும்பு 5: சமூக விஞ்ஞானிகள் சங்கம், 12, சுலைமான் டெரஸ், இணைந்து வெளியிடுவோர், கொழும்பு 10: குமரன் புத்தக இல்லம், B3-G3 ரம்யா பிளேஸ், 1வது பதிப்பு, 2009. (கொழும்பு 10: குமரன் புத்தக இல்லம், B3-G3 ரம்யா பிளேஸ்).

xxvi, 150 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 350., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-659-205-4.

பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் இலங்கையில் முதலாளி வர்க்கம் எழுச்சிபெற்ற வரலாற்றை இந்நூல் விபரிக்கின்றது. நிலமானிய சமூகமாகவும் வணிகவாதப் பொருளாதாரமாகவும் இருந்த இந்நாடு பெருந்தோட்ட பொருளாதார முறையைத் தழுவிக்கொண்டது.  ஆரம்பகட்டத்தில் சுதேச வர்த்தகர்கள் சாராயக் குத்தகை, ஆயக் குத்தகை என்பனவற்றின் மூலம் தொடக்க மூலதனத்தைத் திரட்டினர். பின்னர் பெருந்தோட்டங்களில் முதலீடு, காரீய சுரங்க அகழ்வுத் தொழில் என்பனமூலம் தம் நடவடிக்கைகளை விரிவாக்கினர். சாதியை அடிப்படையாகக் கொண்ட தொழிற்பிரிவினையையுடைய சமூகம் இதனால் உருமாற்றம் பெற்றது.  இவற்றை இந்நூல் விபரிக்கிறது. இந்நூல் சாதியைவிட வர்க்கம் முதலாளித்துவ மாற்றத்தில் முதன்மை பெறுவதை எடுத்துக்காட்டுகின்றது. பல சாதிகள், பல்வேறு இனக்குழுமங்கள் சமயப் பண்பாடுகளை பின்னணியாகக் கொண்ட அநாமதேயங்களாக இருந்தோர் (nobodies) அறியப்பட்டவர்களாக (somebodies) சமூக பொருளாதாரப் படியில் உயர்வதை இந்நூல் விளக்கிச் செல்கின்றது. மேலும் மூலதனத் திரட்சி, சமய மறுமலர்ச்சி, இனக்குழும அடையாளம், அரசியல் இயக்கங்கள், விவாகக் கார்ட்டல்கள் மூலம் பணக்காரக் குடும்பங்கள் ஒன்றுசேர்தல் என்பனவும் விபரிக்கப்படுகின்றன. இவ்விடயங்கள் எவ்விதம் ஒன்றோடொன்று தொடர்புபட்டிருந்தன என்பதையும் இந்நூல் விபரிக்கிறது. குமாரி ஜெயவர்த்தனா இலண்டன் பொருளியற் கல்லூரியில் கலாநிதிப் பட்டம் பெற்றவர். கொழும்புப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறை இணைப்பேராசிரியராகப் பணியாற்றியவர். பெண்ணிய அமைப்புகள், மனித உரிமைகள் இயக்கம் ஆகியவற்றில் இணைந்தும் பணியாற்றியவர். இவர் இலங்கை சமூக விஞ்ஞானிகள் சங்கத்தின் இயக்குநர்களுள் ஒருவர்.

ஏனைய பதிவுகள்

Bitstarz 40 Totally free Spins

Blogs 100 percent free Incentive Currency Better Gambling enterprises Having Totally free Revolves No deposit In may Exactly what are 100 percent free Revolves Gambling