மா.சின்னத்தம்பி. கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, 1/2, டாம் வீதி, 1வது பதிப்பு, 2008. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, 1/2, டாம் வீதி).
xvi, 181 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 300., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-147-7.
இலங்கைப் பொருளாதாரத்திற்கான அறிமுகம், இலங்கையின் உற்பத்தித் துறைகள், இலங்கையின் பொருளாதார வளர்ச்சியும் அபிவிருத்தியும், அரசாங்கமும் வரவுசெலவுத் திட்டமும், வெளிநாட்டு வியாபாரம், சென்மதி நிலுவை, இலங்கையின் நிதியியல்துறை, ஆகிய ஏழு அத்தியாயங்களையும், 6 பின்னிணைப்புகளையும், 33 அட்டவணைகளையும், இலங்கைப் பொருளாதாரம் தொடர்பான 17 சிறப்புக் குறிப்புகளையும் கொண்டதாக இந்நூல் காணப்படுகின்றது. மேற்கண்ட அத்தியாயங்களினூடாக இலங்கையின் பொருளாதார நடைமுறைகள், முன்னேற்றங்கள், மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக இந்நூல் விரிவாக ஆராய்கின்றது. இலங்கைப் பொருளாதாரம் பற்றி அறியவிரும்பும் எவருக்கும் ஏற்றவகையில் இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் சிறப்புப் பட்டத்தையும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் முதுமாணிப் பட்டத்தையும் பெற்ற மா.சின்னத்தம்பி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை விரிவுரையாளராவார்.