7193 பொருளாதாரம் ஆரம்ப ஆராய்ச்சி.

போல் ஏ.சாமுவல்சன் (ஆங்கில மூலம்), பொ.திருநாவுக்கரசு, சே.ஜோ.இளையதம்பி (தமிழ் மொழிபெயர்ப்பு),  கொழும்பு 3: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், சிறிமதிபாயா, 58, சேர் ஏர்ணஸ்ட் த சில்வா மாவத்தை, 1வது பதிப்பு, 1971. (இலங்கை: அரசாங்க அச்சுத் திணைக்களம்).

xiv, (8), 1146 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ.

மசச்சூசெற்சுத் தொழில்நுட்பக் கழகத்தின் பொருளியல் பேராசிரியர் Paul A. Samuelson அவர்களால் எழுதப்பட்ட Economics: An Introductory Analysis என்ற நூலின் தமிழாக்கம் இதுவாகும். இந்நூல் 6 பகுதிகளையுடையது. 1வது பகுதி, இக்கால வாழ்வுக்குரிய மூலாதாரமான பொருளாதார உண்மைகளையும் தாபனங்களையும் ஆராய்ந்து சென்று, தேசிய வருமானம் பற்றிய கருத்து விளக்கத்துடன் முடிவடைகின்றது. 2வது பகுதி, பொருளாதார வளம், மந்தம் என்பவற்றுக்கான காரணங்களை ஆராய்கின்றது. 3வது பகுதி போட்டி, ஏகபோகவுரிமை  ஆகிய சக்திகளுடன் சம்பந்தப்பட்டது. வருமானத்தைப் பங்கிடுதல், உற்பத்திக் காரணிகளுக்கு விலை குறித்தல் ஆகியவை பற்றி நான்காம் பகுதி எடுத்துக்கூறுகின்றது. சர்வதேச வியாபாரத்தின் பணத்துறை அமிசங்களும் உண்மை அமிசங்களும் 5ம் பகுதியில் ஆராயப்பட்டுள்ளன. ஆறாம் பகுதியில் குறிப்பாக அபிவிருத்தி குறைந்த நாடுகள் சம்பந்தமான நடைமுறைப் பொருளாதாரப் பிரச்சினைகள் விளக்கப்பட்டுள்ளன.       

ஏனைய பதிவுகள்

12376 – கலைச்செல்வி: 1997.

ந.இராஜு (இதழாசிரியர்). மட்டக்களப்பு: முத்தமிழ் மன்றம், அரசினர் ஆசிரியர் கலாசாலை, 1வது பதிப்பு, 1997. (மட்டக்களப்பு: ஈஸ்ரன் கிராப்பிக்ஸ், 205ஃ2, பார் வீதி). xvi, 118 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: : 25×19.5