7197 சம்பளம்.

மொரிஸ் டொப். கொழும்பு 3: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், சிறிமதிபாயா, ஏணஸ்ட் த சில்வா மாவத்தை, 1வது பதிப்பு, 1967. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்).

xiv, 196 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

இந்நூல் றுயபநள என்ற தலைப்பில் மொரிஸ் டொப் எழுதி வெளியிட்ட ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பாகும். கேம்பிரிட்ஜ் பொருளாதாரக் கைந்நூல்கள் என்ற தலைப்பில் பொருளாதார விடயங்களைச் சுருக்கமாக அறிமுகம் செய்யும் நூல்வரிசைத் தொடரில் இந்நூல் வெளியிடப்பட்டிருந்தது. முற்காலத்தில் நிலவிய சம்பள அமைப்பிலிருந்து நவீனகால  சம்பளப் பிரச்சினையின் பின்னணியை வேறுபடுத்திக்காட்டுவதுடன் தொடங்கும் ஆசிரியர், வாழ்க்கைத் தரம், சம்பளக் கொடுப்பனவு முறைகள், வெவ்வேறு தொழில்களிலே வேலையாற்றும் நேரத்தின் உத்தம அளவு ஆகியவற்றுடன் சம்பளத்துக்குள்ள தொடர்பை ஆராய்கிறார். நாடறிந்த சம்பளக் கொள்கைகள் சிலவற்றை விளக்கியபின் போட்டி முறையிலும் ஏகபோகவுரிமை முறையிலும் சம்பளத்தை நிர்ணயிப்பதில் பேரம் பேசும் சக்திக்குள்ள பங்கை ஆசிரியர் விளக்குகிறார். வெவ்வேறு தொழிலாளர் தரங்களிலும் வெவ்வேறு இடங்களிலும் சம்பளங்களில் வேறுபாடிருப்பதை அவர் விளக்குகின்றார். தொழிற்சங்கங்களின் வரலாற்றையும், சம்பள இணக்கப் பேச்சுகளில் அவ்வியக்கத்தினதும் அரசினதும் செல்வாக்கையும் சுட்டிக்காட்டுவதோடு நூலை நிறைவுசெய்கின்றார்.

ஏனைய பதிவுகள்

Duck Sauce Huge Crappy Wolf Words

Blogs Cameos or other looks: Thors Lightning bonus game Wolf are an enthusiastic investigative reporter and learn away from disguise who is very a mystery