யோண் மேனாட் கேய்ன்ஸ் (ஆங்கில மூலம்), பொ.சங்கரப்பிள்ளை (தமிழாக்கம்). கொழும்பு 3: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1967. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்).
xvi, 376 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ.
John Maynard Klynes vOjpa The General theory of employment, interest and money என்ற நூலின் 1960ம் ஆண்டு மீள்பதிப்பின் தமிழாக்கம் இதுவாகும். மூலநூல் Macmillan and Co, London வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டிருந்தது. முகவுரை, வரைவிலக்கணங்களும் கருத்துக்களும், நுகர்வு நாட்டம், முதலீட்டுத் தூண்டுகை, பணக்கூலிகளும் விலைகளும், பொதுக்கொள்கை சுட்டுஞ் சிறு குறிப்புகள் ஆகிய ஆறு பிரிவுகளுள் 24 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. கெயின்ஸ் எடுத்துரைத்த பொதுக்கொள்கை பொருளியல் சிந்தனையிலே ஒரு புரட்சியை உண்டாக்கிற்று எனலாம். வழமையான சிந்தனைப் போக்கினின்றும் விடுதலை பெறுவதற்கான ஒரு போராட்டத்தை அக்கொள்கை குறிக்கின்றது. பொருளியலிலே வழமையாகப் பயின்றுவந்த பிண்டப் பாகுபாட்டினின்றும் வேறுபட்ட அண்டப் பொருளியல் எனும் புதியதுறை உருவாகுவதற்கு அது வழிவகுத்தது. கெயின்ஸ் வகுத்துக்கூறிய புதிய கருத்துக்கள், உலகப் போருக்குப் பிற்பட்ட காலத்தில் பொருளாதார ஆராய்ச்சிக்கேற்ற கருவிகளாகப் பயன்பட்டது மட்டுமன்றி, பொருளாதாரப் பூட்கைகளை (கொள்கைகளை) உருவாக்குவதிலும் பயன்பட்டன. பொருளாதார அபிவிருத்திக்குத் திட்டமிடுவதிலே அவை பெரிதும் பயன்பட்டன.