சேவகர் யோகான் தேவானந்தா. நுகேகொட: இலங்கையில் நீதிக்கும் சமாதானத்திற்குமான உலக ஒத்துழைப்பு மன்றம், இலங்கைக் குழு, 11 எல்வின் பிளேஸ், 1வது பதிப்பு, 2006. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(4), 60 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
சேவகர் யோகான் தேவானந்தா இலங்கையில் நீதிக்கும் சமாதானத்திற்குமான உலக ஒத்துழைப்பு மன்றத்தின் இலங்கைக் குழுவின் முன்னோடித் தலைவராகப் பணியாற்றியவர். கடந்த 50 வருடங்களாக அடிமட்ட மக்களுடன் நடத்தப்பட்ட ஒரு உரையாடலின் எழுத்து வடிவமாக இந்நூல் அமைகின்றது. பண்டைய சமயங்கள், தர்மங்கள், இன்றைய சித்தாந்தங்கள் என்பன தொடர்பான செயல்-சிந்தனைச் செயன்முறை பற்றிய உயிர்த்துடிப்பான இவ்வுரையாடல் அபிவிருத்தி, நீதி, விடுதலை, சமாதானம் என்பனவற்றை ஆய்வுப்பொருளாகக் கொண்டது. நீதியையும் சமாதானத்தையும் மட்டுமல்லாது, அரச-சார்பற்ற அமையங்களின் செயற்பாடுகளின் முழுப்பரப்பையும், அவற்றின் செயற்பாடுகளின்போது தோன்றும் பிரச்சினைகளையும் இந்நூல் தொட்டுச் செல்கின்றது. இலங்கையில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்குரிய அரசின் உரிமையை அங்கீகரிக்கும் அதேவேளையில், அரச சார்பற்ற அமையங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான அரசின் நிலைப்பாட்டையும் இந்நூல் விரிவாக விமர்சனத்துக்குட்படுத்துகின்றது.