7222 கல்வியில் எழுவினாக்கள்.

சபா.ஜெயராசா. கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park, 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 11: சேமமடு பதிப்பகம்).

viii, 108 பக்கம், விலை: ரூபா 280., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-1857-85-1.

எழுவினாக்கள் எழுபொருள்கள் எனவும் குறிப்பிடப்படும். கல்விச் செயல்முறையின் விரைந்த மாற்றங்களுடன், பிரச்சினைகளும் தொடர்ந்து மேலெழுந்தவண்ணமிருக்கும். பிரச்சினைகளைக் குவியப்படுத்தும் கருத்தாடல்கள், நாம் செல்லும் வழியைச் செம்மையாக்க உதவும். அவ்வகையில் இந்நூல் கல்விப்புலத்தின் 16 விடயங்களையும் அதனூடாக எழும் வினாக்களுக்கு கருத்தாடல் முறையில் விளக்கங்களையும் வழங்குகின்றது. கல்வியில் சமத்துவமும் சம சந்தர்ப்பமும், சிவில் சமூகமும் கல்வியும், கல்வியியலும் கேடுறுத்தலும், இனக்குழும உறவுகளும் விளைவுகளும், கல்வி நிதி வழங்கல், மனித வள விருத்தியும் கல்வியும், பெண்களும் கல்வியும், கல்விக்குரிய தனிநபர் கேள்வியும் சமூகக் கேள்வியும், பல்கலைக்கழகக் கல்விப் பிரச்சினைகள், கல்வியில் பண்பும் தரக்காப்பீடும், முழுமைப்புல முகாமைத்துவமும் கல்வியும், அறிவுக் காலனித்துவமும் மறுவாசிப்பும், அறிவை முகாமைசெய்தல், செயல்நிலைக் கற்றலை முன்னெடுத்தல், மரபு வழியான கற்பித்தலிலிருந்து விலகுதல், ஆழ்கற்றல் ஆகிய தலைப்புகளில் விடயங்களை இந்நூல் ஆராய்கின்றது. (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் ஆர்.14061)

ஏனைய பதிவுகள்