ஜெரே ப்ரோஃபி (ஆங்கில மூலம்), புஷ்பா சிவகுமாரன் (தமிழாக்கம்), சோ.சந்திரசேகரம் (பதிப்பாசிரியர்). கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, 1/2, டாம் வீதி, 1வது பதிப்பு, 2007. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, 1/2, டாம் வீதி).
57 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 19×12.5 சமீ., ISBN: 978-955-659-024-2.
பாடசாலைக் கற்றலின் மீது குடும்பம் செலுத்தும் செல்வாக்குப் பற்றிய ஆய்வுகள் குறிப்பிடத்தக்க வரலாற்றைக் கொண்டுள்ளன. புள்ளிவிபரங்களை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது வறுமை, பாடசாலையில் தாழ்ந்த செயலாற்றலை உண்டுபண்ணக்கூடுமென்று எதிர்வு கூறலாம். எனினும் உற்சாகத்தை ஊட்டும் மொழிவளம் மிக்க ஆதரவான சூழல், சமூகப் பொருளாதாரச் சூழ்நிலைகளை வெற்றிகொண்டு செயற்படமுடியும். வேறு விதமாகக் கூறினால் மாற்றி அமைக்கக்கூடிய வீட்டுப் பாடத்திட்டமானது- குடும்பத்தின் தொடர்புகள், பழக்கவழக்கங்கள், வாழ்க்கைக் கோலங்கள் உட்பட- குடும்பத்தின் அந்தஸ்தைவிட, நூல் கல்விகற்றல் பற்றிய மேலும் வலுவான எதிர்வுகூறும் கருவியாக அமையலாம். அதாவது, குடும்பத்தின் பொருளாதார நிலைமை எப்படி இருப்பினும், வீட்டுப்பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்குப் பாடசாலை குடும்பங்களுடன் சேர்ந்து செயற்படலாம். இவ்வாறான கல்வி தொடர்பாக பாடசாலைக்கும் பெற்றோர்களுக்கும் இடையிலான தொடர்பினை இந்நூல் விபரிக்கிறது. ஜெரே ப்ரோஃபி மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் கல்விப்பிரிவின் பேராசிரியராவார்.