க.அருந்தவராஜா, அன்பரசி அருந்தவராஜா. சுவிட்சர்லாந்து: கலை இலக்கியப் பேரவை, ஜெனீவா, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 6: றண்யாஸ் கிறப்பிக்ஸ்).
xii, 101 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.
தாயகத்திலும் புலம்பெயர் வாழ்விலும் கிடைத்தவையும், கண்டுகொண்டவையுமான அனுபவங்கள், தமது கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் ஊடாகக் கிடைத்த அறிதல்கள், பட்டறிவுகள் ஆகியவற்றின் துணைகொண்டு இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. பெற்றோரின் உன்னதமான பாத்திரத்தை இந்நூல் எடுத்து விளக்குகின்றது. சமூகத்தின் அத்திவாரமான குடும்பத்தில் நிகழும் சந்தோஷம், துக்கம், நெருக்கடி, ஆபத்துக்காலங்களில் அதன் தலைமைப் பாத்திரம் ஏற்பவரும் குடும்ப உறுப்பினர்களும் எவ்வாறு நடந்துகொண்டு நல்ல தீர்வினை எய்தலாம் என்பதையும் இந்நூல் கோடிட்டுக் காட்டுகின்றது. நடைமுறையில் நிலவுகின்ற குடும்ப நிர்வாக முறைகளான தந்தைமுறை, சர்வாதிகார முறை, ஜனநாயக முறை, சந்தர்ப்ப அணுகுமுறை என்பவற்றை பகுப்பாய்வுக்கு உட்படுத்தி விவாதிப்பது சுவையாக உள்ளது. இவை அனைத்தும் அறிமுகம், வழிகாட்டுதல்கள் ஏன், பிள்ளைகளைஅறிந்து கொள்ளல், குடும்பமும் தலைமைத்துவமும், தமிழர் இல்ஊடகம், குடும்ப முறிவுகள் ஆகிய ஆறு இயல்களில் எழுதப்பட்டுள்ளன.