ந.சந்திரகுமார். மட்டக்களப்பு: ராஜாஸ் புத்தக நிலையம், 111 பிரதான வீதி, 1வது பதிப்பு, மார்ச் 2004. (மட்டக்களப்பு: சண் அச்சகம், இல. 05, இருதயபுரம்).
v, 143 பக்கம், விலை: ரூபா 165., அளவு: 22×15 சமீ.
இந்நூல் மாணவர்களின் சுயகற்றலை ஊக்குவிக்கத்தக்க சுருக்கக் குறிப்புகள், செயற்பாடுகள், பரிசோதனைகள், மாதிரி-வினா-விடைகள், விஞ்ஞான விளக்கங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. பல்வேறு கருமங்களுக்காகத் திரவியங்களைப் பயன்படுத்துதல், பார்வையை விருத்திசெய்துகொள்வதற்கான உத்திகள், அங்கிகளின் உறுப்புகளின் கட்டமைப்பிற்கும், அவ்வுறுப்புகளால் ஆற்றப்படும் தொழிலுக்கும் இடையிலான தொடர்புகள், ஓரை வட்டத்தை இனங்காணுதல், மனிதத் தேவைகளுக்கான தாவர உற்பத்திகள், அன்றாடக் கருமங்களுக்காக விசையைப் பயனுறுதியுடையவிதத்தில் பயன்படுத்தல், சக்தியை பயனுடையவாறு பயன்படுத்தல், மின்காந்த விளைவுகளைப் பயன்படுத்தல், உயிர்ப் பல்வகைமையைக் காத்தல், விண்வெளி ஆய்வின் முக்கியத்துவம் ஆகிய தலைப்புகளில் இந்நூல் தகவல்களை உள்ளடக்குகின்றது. 1992இல் ஆசிரிய நியமனம்பெற்ற நூலாசிரியர் சந்திரகுமார், மட்/மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலயத்தின் ஆசிரியராவார்.