H.R.நிமால் ஜயசேகர (மூலம்), A.J.குணவர்த்தன, G.J..விஜேசேன, M.P.ஏக்கநாயக்க, D.J.வனசிங்க, L.A.பெரேரா, K.D.D.பேர்சிவல், M.அப்துல் வாகிது (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1989. (கொழும்பு: The Pacific Press).
72 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21 சமீ.
தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட இந்நூலில், வட்டம் தொடர்பான சில சந்தர்ப்பங்களைக் கற்றுக்கொள்ள முடியும். வட்ட வடிவத்தின் கேத்திரகணித மாதிரியே வட்டமாகும். வட்டவடிவமான பொருட்களின் தன்மைகளைப் படிப்பதற்கு வட்டங்கள் பற்றிய கேத்திரகணித அறிவு உதவுகின்றது. இந்நூலில் வட்ட நாண்கள், ஒரு வட்டத்திலுள்ள கோணங்களின் பண்பு, தொடலிகள் ஆகிய விடயங்கள் பற்றிக் குறிப்பாகப் பேசப்படுகின்றன.