எஸ்.அன்ரனி நோர்பேட். கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, 1/2 டாம் வீதி, 1வது பதிப்பு 2007. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, 1/2, டாம் வீதி).
(6), 221 பக்கம், வரைபடங்கள், விலை: ரூபா 350., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-659-107-9.
“காலநிலையியல்: வளிமண்டல அமைப்பும் செயன்முறையும்” என்ற தலைப்பில் 1996ஆம் ஆண்டில் இந்நூலாசிரியர் 5 அத்தியாயங்களில் எழுதிய நூலின் விரிவான பதிப்பு இதுவாகும். காலநிலையியல் பற்றிய அறிமுகம், வளிமண்டலத்தின் அமைப்பும் சேர்க்கையும், வளிமண்டலத்தின் சக்தி, வளி வெப்பநிலை, ஈரப்பதன் ஆகிய 5 அத்தியாயங்களில் முன்னைய நூல் எழுதப்பட்டு வெளிவந்தது. புவியியல் கற்கை நெறியில் பின்னாளில் ஏற்பட்ட மாற்றங்களைக் கருத்திற்கொண்டும், புதிய செல்நெறிகளை உள்வாங்கியும் புதுக்கி எழுதப்பட்ட இந்நூலில், காலநிலையியல் ஓர் அறிமுகம், வளிமண்டலத்தின் அமைப்பும் சேர்க்கையும், வளிமண்டலத்தின் சக்தி, வளிமண்டலத்தின் வெப்பநிலை, வளிமண்டலத்தின் அமுக்கம், காற்றுக்கள், வளிமண்டலத்தின் ஈரப்பதன், ஆவியாக்கம், முகில்களின் உருவாக்கமும் வகைகளும், படிவு வீழ்ச்சி, கெப்பனின் காலநிலைப் பாகுபாடு: பிரதான பிரிவுகளும் இயல்புகளும், கெப்பனின் காலநிலைப் பிரிவுகள் ஆகிய 12 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 630813).