7360 புவியியல் மூல தத்துவங்கள்: பௌதிகவியலும் பண்பாட்டியலும்.

வீ.சீ.பின்ச், ஜீ.டீ.திரவாதா, ஏ.எச்.றொபின்சன், ஈ.எச்.ஹமன்ட் (ஆங்கில மூலம்), எஸ்.ஐயாத்துரை, கே.சோமசுந்தரம் (தமிழ் மொழிபெயர்ப்பு). கொழும்பு 7: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், சிறிமதிபாயா, 58, சேர் ஏர்ணஸ்ட் த சில்வா மாவத்தை, 1வது பதிப்பு, ஜுலை 1974. (இலங்கை: அரசாங்க அச்சுத் திணைக்களம்).

xiv, (2), 846 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×19 சமீ.

V.C.Finch, G.T.Trewarthe, A.H.Robinson, E.H.Hammond ஆகியோர் 1957இல் இணைந்து எழுதிய  Elements of Geography: Physical and Cultural என்ற நூலின் தமிழாக்கம் இதுவாகும். மூன்று பிரதான பாகங்களை உள்ளடக்கிய இந்நூலின் முதலாம் பாகத்தில் புவியியலின் பௌதிக உறுப்புக்கள் என்ற தலைப்பின்கீழ், காலநிலை உறுப்புகள், காலநிலை வகைகளும், அவற்றின் பரம்பலும், நிலவுருவங்களும் கடல்களும், புவிவள வருவாய்கள் ஆகிய அமிசங்கள் விளக்கப்பட்டுள்ளன. இரண்டாம் பாகத்தில் மக்கட்டொகை பற்றிய விளக்கம் தரப்பட்டுள்ளது. புவியியலின் பண்பாட்டு அங்கங்கள் என்ற மூன்றாம் பாகத்தில்  பௌதிகப் புவியை மனிதன் பயன்படுத்துவதனால் உண்டாகும் குடியிருப்புகள், பயிர்ச்செய்கை, கைத்தொழில், போக்குவரத்து மற்றும் வியாபார விளைவுகள் பற்றி விளக்கப்பட்டுள்ளன. நான்காவது பாகம் இந்நூலின் பிரதான விடயம் தொடர்பான 5 பின்னிணைப்புகளைக் கொண்டுள்ளது.

ஏனைய பதிவுகள்